‘கேரளாவை கொல்லும் கொரானா’-மாநில பேரழிவாக அறிவித்த அரசு -மூன்று பேரால் முகமூடிக்குள் முழுகிய கேரளா .. 

 

‘கேரளாவை கொல்லும் கொரானா’-மாநில பேரழிவாக அறிவித்த அரசு -மூன்று பேரால் முகமூடிக்குள் முழுகிய கேரளா .. 

கடந்த சில வாரங்களில் சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் 20 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் கடந்த நான்கு நாட்களில் சீனாவில் 400 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றது. இதனை உலக சுகாதார அமைப்பு  ‘உலக சுகாதார அவசரநிலை’யாக அறிவித்துள்ளது

சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு நடந்த சோதனையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால்  கொரோனா வைரசால் ஏற்படும் கொடிய நோயை “மாநில பேரழிவு” என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
“இந்த அறிவிப்பு மக்களை பயமுறுத்துவதற்காக அல்ல. வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த  இது உதவுகிறது” என்று மாநில சுகாதார அமைச்சர் கே.கே. ஷைலஜா கூறினார்.

corona-virus-kerala-080

கேரளாவில் உள்ள மூன்று நோயாளிகளும் சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து திரும்பிய மாணவர்கள். மட்டுமல்ல அவர்கள் ஒன்றாக பயணம் செய்வது உட்பட ஒருவருக்கொருவர் உடல் ரீதியான தொடர்பில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது வரை, கேரளாவிலிருந்து 140 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன, அவற்றில் 46 மாதிரிகளுக்கு  நெகடிவ் முடிவும், மூன்று பாசிட்டிவ் முடிவும் வந்துள்ளன. மீதமுள்ள முடிவுகளுக்கு காத்திருக்கின்றனர் .

“கொரோனா நோயாளி காசர்கோடு காஞ்சங்கட் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்று திருமதி ஷைலாஜா இன்று காலை தெரிவித்தார். “இதில் பீதியடைய ஒன்றுமில்லை. மாவட்ட மருத்துவ அதிகாரிகள் தலைமையிலான சுகாதார அதிகாரிகள் அவர்களை  கண்காணித்து வருகின்றனர் ” என்று கே.கே. ஷைலஜா கூறினார்.

coronavirus-kerala-080

இந்த வைரஸ் பாதிப்புக்கு 2,000 க்கும் மேற்பட்டோர் கேரளாவில் உள்ள தங்கள் வீடுகளில் கண்காணிப்பில் உள்ளனர். மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் எழுபது பேர் கண்காணிக்கப்படுகிறார்கள். நோய்த்தொற்றுக்குள்ளான முதல் நோயாளி சீரான முன்னேற்றத்தைக் கண்டுள்ளார், சீனாவிலிருந்து யாராவது வந்தால் சுகாதாரத் துறைக்கு தெரிவிக்குமாறு  மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.