கேரளாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்……சபரிமலைக்கு வருவதை தவிர்க்குமாறு பக்தர்களுக்கு வேண்டுகோள்…..

 

கேரளாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்……சபரிமலைக்கு வருவதை தவிர்க்குமாறு பக்தர்களுக்கு வேண்டுகோள்…..

கேரளாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள தற்போதைய சூழ்நிலையில், சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு வருவதை தவிர்க்குமாறு பக்தர்களுக்கு திருவாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தென்இந்தியாவில் குறிப்பாக கேரளாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று மட்டும் புதிதாக எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து 10ம் தேதி நிலவரப்படி, அம்மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14ஆக உயர்ந்தது.

திருவாங்கூர் தேவஸ்தானம்

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், சபரிமலை அய்யப்பன் கோயில் நாளை (13ம் தேதி) மாதந்திர பூஜைக்காக நாளை (13ம் தேதி) திறக்கப்பட உள்ளது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் சபரிமலைக்கு வருவதை தவிர்க்கும்படி திருவாங்கூர் தேவஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக திருவாங்கூர் தேவஸ்தானம் வாரியத்தின் தலைவர் என்.வாசு இது குறித்து கூறியதாவது: 

சபரிமலை அய்யப்பன் கோயில்

பக்தர்கள் சபரிமலைக்கு வருவதை தடுக்க முடியாது. ஆனால் தற்போதைய சூழ்நிலை காரணமாக பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்பதை அவர்களுக்கு எங்களது வேண்டுகோள். இவ்வாறு அவர் தெரிவித்தார். கொரோனா  வைரஸ் பயம் காரணமாக  கேரளாவில் இம்மாதம் 31ம் தேதி வரை 1 முதல் 7ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.