கேரளாவுக்கு யெல்லோ அலர்ட்; மலைப்பகுதிகளில் யாருக்கும் அனுமதி இல்லை?!..

 

கேரளாவுக்கு யெல்லோ அலர்ட்; மலைப்பகுதிகளில் யாருக்கும் அனுமதி இல்லை?!..

இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் தகவலை தொடர்ந்து கேரளாவின் பேரிடர் மேலாண்மை குழு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு அபாய எச்சரிக்கை அறிவித்துள்ளது. 

தமிழகத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை தொடர்ந்து கேரள மாநிலத்துக்கு யெல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், எர்னாகுளம், இடுக்கி, திருச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் வரும் 29-ஆம் தேதி கனமழை பொழியும் என அவதானித்திருக்கிறது இந்திய வானிலை ஆராய்ச்சி மையம்.

இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் தகவலை தொடர்ந்து கேரளாவின் பேரிடர் மேலாண்மை குழு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு அபாய எச்சரிக்கை அறிவித்துள்ளது. 

zfdb

எர்னாகுளம், இடுக்கி, மலப்புரம், பத்தனம்திட்டா, கோட்டயம், வயநாடு, கோலிக்கோடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் மணல்சரிவு ஏற்பட அதிக  வாய்ப்புள்ளதால். இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மலைப்பகுதிகளில் யாருக்கும் அனுமதி இல்லை என கேரள பேரிடர் மேலாண்மை கூறியிருக்கிறது. 

adf

இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் தகவல்படி, கேரளாவில் ஏப்ரல் 28-ஆம் தேதி மிதமான மழைப்பொழிவு இருக்கும். அன்று காலை ஒரு மணிநேரத்துக்கு 30 – 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 29-ஆம் தேதி ஒரு மணிநேரத்துக்கு 40 – 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மீனவர்கள் இந்த தினங்களில் கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் வலியுறுத்தியுள்ளது.

மக்கள் பாதுகாப்புக்காக கேரள பேரிடர் மேலாண்மையின் சில கோரிக்கைகள்

zxfbxb

1. பேஸ்புக்கில் பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம். கேரள முதல்வர் மற்றும் கேரள பேரிடர் மேலாண்மையின் அதிகாரப்பூர்வ பக்கங்களை மட்டும் கவனியுங்கள்.

2. ஆற்றங்கரையோரம் வசிப்பவர்கள், வெள்ளம் வர வாய்ப்புள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ளுங்கள்.

3. ஆறுகளிலும் கால்வாய்களிலும் நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் குளிக்கவோ, துவைக்கவோ அந்த நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம்.

4. பலத்த காற்று வீசும் என்பதால், மரத்தடியிலோ, மின் கம்பத்தின் அருகிலோ வாகனங்களை நிறுத்த வேண்டாம்.

5. மலைப் பகுதிகளில் அமைந்துள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்ல வேண்டாம்.

6. அவசர உதவிக்கான எண் 1077, இதோடு உங்கள் மாவட்டத்துக்கான எஸ்டிடி கோட் நம்பரை சேர்த்து டயல் செய்யுங்கள் என அறிவித்துள்ளது.

 

இதையும் வாசிங்க

இலங்கையில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த மூவர் கைது: 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு!