கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுமளவுக்கு கனமழை!

 

கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுமளவுக்கு கனமழை!

கொச்சி விமான நிலையத்தையே மூடும் அளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஒன்பது மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள 14 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கனமழை. சென்னை விமான நிலையத்தில் தமிழிசை பேட்டி குடுக்குறது மாதிரி, கேரளாவில் மழை பெய்யுறதெல்லாம் சர்வசாதாரணமாக கடந்துபோக முடியாத அளவுக்கு விஷயம் சீரியஸ். கொச்சி விமான நிலையத்தையே மூடும் அளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஒன்பது மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள 14 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வயநாடு பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். இதுவரை இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

Kochi airport flooded

எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், மற்றும் காசர்கோடு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 22,000க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கேரளா மட்டுமல்ல, மஹாராஷ்ரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை தென்மேற்கு பருவ மழை ஒருவழி பண்ணிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். மஹாராஷ்ட்ராவில் மட்டும் 42 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.