கேரளாவில் வேலை செய்யும் தமிழர்களுக்கு கிடைத்த சலுகைகள் இதோ!

 

கேரளாவில் வேலை செய்யும் தமிழர்களுக்கு கிடைத்த சலுகைகள் இதோ!

உழைப்பாளி-விருந்தினர்களே, உங்களுக்காக கேரள கம்யயூனிஸ்ட் அரசாங்கம் செய்துள்ள வசதிகளை அறிந்து கொள்க.

கொரோனா தொற்று உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக கேரளாவில் நோய் தொற்று அதிகமாகி கொண்டே செல்கிறது. இருப்பினும் அம்மாநில அரசு தேவையான உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றது. 

ttn

இந்நிலையில் கவிஞர் சுகுமாரன், ‘தமிழகத்தில் இருந்து வந்து கேரளாவிற்காக உழைக்கும், உழைப்பாளி-விருந்தினர்களே, உங்களுக்காக கேரள கம்யயூனிஸ்ட் அரசாங்கம் செய்துள்ள வசதிகளை அறிந்து கொள்க.

1.நீங்கள் குடியிருக்கும் வீட்டின்/கட்டிடத்தின் உரிமையாளர் உங்களை வெளியேற்ற முயற்சி செய்தால், உள்ளூர் பஞ்சாயத்தில்/முனிசிப்பாலிடியில் புகார் தெரிவிக்கலாம். கொரானா பாதிப்பு முடியும் வரையில், அவர்களால் உங்களை வெளியேற்ற முடியாது.

ttn

2.உணவு பெறுவதில் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டால் உங்கள் உள்ளூர் பஞ்சாயத்தில், மக்கள் உணவகங்கள் மூலம் 20 ரூபாய்க்கு உணவு தயார் செய்து தரப்படுகிறது. உங்கள் பகுதி வார்டு மெம்பரை தொடர்பு கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு உதவி செய்வார்.

3. அங்கே உணவு வாங்க பணம் இல்லையென்றாலும் உங்கள் வார்டு மெம்பரை தொடர்பு கொள்ளுங்கள், அவர் உங்களுக்கு உணவை/உணவு பொருட்களை இலவசமாக பெற்றுத்தருவார்’ என்று பதிவிட்டுள்ளார்.