கேரளாவில் வீட்டு வாடகை செலுத்தமுடியாத 48 தமிழ் குடும்பங்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் உதவ வேண்டும் – சீமான் ட்வீட்

 

கேரளாவில் வீட்டு வாடகை செலுத்தமுடியாத 48 தமிழ் குடும்பங்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் உதவ வேண்டும் – சீமான் ட்வீட்

இதனால் நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்களுக்கும் தினக்கூலிகளும் கையில் பணம் இல்லாமல் செய்வதறியாது திகைத்து போயுள்ளனர். 

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்களுக்கும் தினக்கூலிகளும் கையில் பணம் இல்லாமல் செய்வதறியாது திகைத்து போயுள்ளனர். இந்நிலையில் கேரளாவில் வீட்டு வாடகை கொடுக்க முடியாத 48 தமிழ்க் குடும்பங்களை வீட்டின் உரிமையாளர் வீட்டை விட்டு துரத்தியுள்ளார். கொள்வாயலல் கிராமத்தில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில்  வசித்து வந்த இந்த தமிழ் குடும்பங்கள் மரம் வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். ஊரடங்கால் தற்போது வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.  இத்தகைய சூழலில் தான் அவர்கள் வீட்டை விட்டு துரத்தி விடப்பட்டுள்ளனர். 

 

 

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் சீமான், “வாடகைக்கு பணம் செலுத்தாததால் 48 தமிழ் குடும்பங்கள் அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து துரத்தப்பட்டுள்ளனர். இதனை கேட்டவுடன் மிகுந்த வருத்தமாக உள்ளது. ஊரடங்கால் அன்றாட செலவுக்கே பணம் இல்லாமல் தவித்துவரும் தொழிலாளர்கள் வாடகைகளை செலுத்தமுடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அவர்களை கவனித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.