கேரளாவில் வயதான தம்பதியருக்கு கொரோனா குணமானது! – செவிலியருக்கு தொற்றியதால் அதிர்ச்சி

 

கேரளாவில் வயதான தம்பதியருக்கு கொரோனா குணமானது! – செவிலியருக்கு தொற்றியதால் அதிர்ச்சி

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்தவர் தாமஸ் (93), இவரது மனைவி மரியம்மா (88). இவர்கள் இருவரும் கடந்த பிப்ரவரி 29ம் தேதி இத்தாலியில் இருந்து கேரளா வந்தனர். இவர்கள் இருவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதாக கடந்த 8ம் தேதி கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 93 மற்றும் 88 வயதான தம்பதியர் பூரண நலம் பெற்று வீடு திரும்பியது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளித்த கேரள அரசுக்கு பாராட்டு குவிகிறது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்தவர் தாமஸ் (93), இவரது மனைவி மரியம்மா (88). இவர்கள் இருவரும் கடந்த பிப்ரவரி 29ம் தேதி இத்தாலியில் இருந்து கேரளா வந்தனர். இவர்கள் இருவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதாக கடந்த 8ம் தேதி கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடக்கத்தில் சிகிச்சைக்கு இவர்கள் இருவரும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. என்ன நடந்தாலும் பரவாயில்லை எங்களை எங்கள் வீட்டில் விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளனர்.

covid-19-patiients

அவர்களை சமாதானம் செய்யும் வகையில் இருவருக்கும் ஒரே அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இருவருக்கும் சிறுநீரக பிரச்னை உள்ளிட்ட வேறு சில மருத்துவ பிரச்னைகளும் இருந்தன. அதனால் மிகத் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது இவர்கள் இருவருக்கும் நெகட்டிவ் ஆக ரிசல்ட் வந்துள்ளது. இதனால் விரைவில் இவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.
இது குறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா கூறுகையில், “முதியவர்கள் இருவரும் முதலில் ஒத்துழைக்கவில்லை. ஆனால், செவிலியர்கள் அவர்களுடன் அன்பாக பழகி சிகிச்சை அளித்தனர். மிகவும் கனிவோடு கவனித்துக்கொண்டனர். இதனால் அவர்கள் கடைசியில் ஒத்துழைப்பு கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால், சிகிச்சை அளித்த செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதியவர்களிடம் அன்பாக நடந்துகொண்டு அவர்களை குணப்படுத்திய மருத்துவக் கல்லூரி பணியாளர்கள் அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.