கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பீதி… சிகிச்சை அளித்த நர்ஸும் பாதிப்பு!

 

 கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பீதி… சிகிச்சை அளித்த நர்ஸும் பாதிப்பு!

வவ்வால் மற்றும் புறாக்களின் மூலம் பரவுவதாக சொல்லப்படுவது நிபா வைரஸ். கடந்த ஆண்டே கேரளத்தில் இந்த நிபா வைரஸுக்கு நர்ஸ் லினி உட்பட 17 பேர் பலியாயினர். இப்போது மீண்டும் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு கல்லூரி மாணவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

 கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பீதி… சிகிச்சை அளித்த நர்ஸும் பாதிப்பு!

வவ்வால் மற்றும் புறாக்களின் மூலம் பரவுவதாக சொல்லப்படுவது நிபா வைரஸ். கடந்த ஆண்டே கேரளத்தில் இந்த நிபா வைரஸுக்கு நர்ஸ் லினி உட்பட 17 பேர் பலியாயினர். இப்போது மீண்டும் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு கல்லூரி மாணவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் 315 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

நிபா வைரஸ்

கேரளம் முழுவதுமுள்ள மருத்துவமனைகளில் இதற்காக தனி வார்டுகள் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் ஒரு கல்லூரி மாணவரிடம் கண்டுபிடிக்கப்பட்ட நிபா வைரஸ் பாதிப்புக்குள்ளான ரத்த மாதிரிகள் ஆலப்புழாவில் உள்ள நுண்ணுயிர் ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கும் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவரது ரத்த மாதிரிகள் பூனாவில் இருக்கும் தேசிய நுண்ணுயிர் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பப்பட்டு அங்கும் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.இதற்கிடையே அந்த மாணவருக்கு சிகிச்சையளித்த 2 நர்ஸுகள் ,அவர்களுடன் தங்கியிருந்த நண்பர் உட்பட நான்கு பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை

இதைத்தொடர்ந்து இவர்களுடன் நெருங்கிப் பழகிய 315 பேர் இப்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.இது தொடர்பான ஆலோசனைகளும் உதவிகளும் வழங்குவதற்கான 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பிவைத்திருக்கிறது.