கேரளாவில் மதுக்கடைகள் திறப்பு இப்போதைக்கு இல்லை! – பினராயி அரசு உறுதி

 

கேரளாவில் மதுக்கடைகள் திறப்பு இப்போதைக்கு இல்லை! – பினராயி அரசு உறுதி

ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல மாநிலங்கள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகள் திறப்பு இல்லை என்று அம்மாநில அரசு உறுதியபட கூறியுள்ளது.
ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல மாநிலங்கள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் மதுக்கடைகளைத் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் வேகமாகலாம் என்று மருத்துவர்கள் எச்சரக்கைவிடுத்துள்ளனர்.

liquor-shops-34

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்துவிட்டதால் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்க வேண்டியது அவசியம் என்று தமிழக அரசு கூறி வரும் நிலையில், கேரள அரசு மதுக்கடைகள் விவகாரத்தில் தன்னுடைய நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. வழிபாட்டுத் தலங்களே திறக்கப்படாத நிலையில், மதுக்கடைகளைத் திறப்பது தவறான எண்ணத்தை ஏற்படுத்தும். அதனால், மே 17 வரை கேரளாவில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. புதிதாக கொரோனா தொற்று யாருக்கும் ஏற்படாத நிலையிலும் கூட மதுக்கடைகள் திறப்பு இப்போதைக்கு இல்லை என்று முடிவெடுத்த பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசுக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.