கேரளாவில் தொலைக்காட்சி நிருபருக்கு கொரோனா உறுதி – கலெக்டர் உட்பட 3 பேர் சுய தனிமைப்படுத்தல்

 

கேரளாவில் தொலைக்காட்சி நிருபருக்கு கொரோனா உறுதி – கலெக்டர் உட்பட 3 பேர் சுய தனிமைப்படுத்தல்

கேரளாவில் ஒரு தொலைக்காட்சி நிருபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொச்சி: கேரளாவில் ஒரு தொலைக்காட்சி நிருபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவின் காசராகோட்டில் ஒரு தொலைக்காட்சி நிருபருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக காசராகோட் மாவட்ட ஆட்சியர் சஜித் பாபு, சில நாட்களுக்கு முன்பு அந்த தொலைக்காட்சி நிருபருக்கு நேர்காணல் கொடுத்திருந்தார்.

தற்போது தொலைக்காட்சி நிருபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர், அவரது ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர் ஆகியோரை சுய தனிமைப்படுத்தலுக்கு செல்லுமாறு அங்குள்ள சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

மூன்று சுகாதார ஊழியர்கள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் உட்பட 10 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் நேற்று தெரிவித்திருந்தார்.

ttn

கேரள மாநிலத்தின் ஒரு முக்கிய தொலைக்காட்சி சேனலில் பணிபுரியும் நிருபர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருப்பதன் மூலம், அம்மாநிலத்தில் ஊடக துறையில் முதல் கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 19 அன்று நான் நிருபருக்கு ஒரு நேர்காணலைக் கொடுத்தேன். அவர் கொரோனா வைரஸுக்கு சாதகமாக பரிசோதித்துள்ளார். என்னுடன், எனது ஓட்டுநரும் துப்பாக்கி ஏந்தியவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்று மாவட்ட ஆட்சியர் சஜித் பாபு கூறியுள்ளார்.

அத்துடன் ஒரு கேமராமேன், டிரைவர் மற்றும் ஊடக அமைப்பின் மற்ற இரண்டு ஊழியர்களும் தனிமைப்படுத்தப்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சமூக விலகல் மற்றும் பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு ஊடக அமைப்பு பத்திரிகையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.