கேரளாவில் சானிடைசர், சுகாதார முகமூடி வழங்கும் ரோபோக்கள் – வைரல் வீடியோ உள்ளே

 

கேரளாவில் சானிடைசர், சுகாதார முகமூடி வழங்கும் ரோபோக்கள் – வைரல் வீடியோ உள்ளே

கேரளாவில் ரோபோக்கள் பொதுமக்களிடம் கொரானா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

கொச்சி: கேரளாவில் ரோபோக்கள் பொதுமக்களிடம் கொரானா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கேரளாவின் கொச்சி நகரில் ரோபோக்கள் பொதுமக்களிடம் கொரானா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. அசிமோவ் ரோபாட்டிக்ஸ் என்ற நிறுவனம் 2 ரோபோக்களை உருவாக்கியுள்ளது. கையை சுத்தம் செய்வதற்கான சானிடைசர், சுகாதார முகமூடிகள் ஆகியவற்றை அந்த ரோபோக்கள் பொதுமக்களுக்கு வழங்குகின்றன.

அத்துடன் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான சுகாதார வழிகாட்டுதல்களை ஆடியோ மற்றும் வீடியோ மூலமாக விவரிக்கின்றன. மக்கள் அதிகமாக கூடும் விமான நிலையம், வணிக வளாகங்களில் இதுபோன்ற ரோபோக்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாக அசிமோவ் ரோபாட்டிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி சஜி கோபிநாத் தெரிவித்துள்ளார். மேலும் அந்த ரோபோக்களும் முகத்தில் சுகாதார முகமூடி அணிந்திருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ரோபோக்கள் கொரோனா விழிப்புணர்வு செய்யும் வீடியோவை சசிதரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.