கேரளாவில் கொரோனா வைரஸால் சிகிச்சை பெறுபவர்களின் 16லிருந்து 17 ஆக அதிகரிப்பு!

 

கேரளாவில் கொரோனா வைரஸால் சிகிச்சை பெறுபவர்களின் 16லிருந்து 17 ஆக அதிகரிப்பு!

அபுதாபி, துபாயில் இருந்து கேரளாவுக்கு வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு இடுக்கியில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் குணமடைந்துள்ளார்.

அபுதாபி, துபாயில் இருந்து கேரளாவுக்கு வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு இடுக்கியில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் குணமடைந்துள்ளார். இதனால் இடுக்கி மாவட்டம் மீண்டும் கொரோனா தொற்று இல்லாத மாவட்ட பட்டியலில் சேர்ந்துள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16லிருந்து 17 ஆக அதிகரித்துள்ளது.

coronavirus

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “கேரளாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர் 505 பேர். இதில் மூவர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் 485 பேர். இதுவரை மாநிலம் முழுக்க 23,930 பேர் மருத்துவக்கண்காணிப்பில் உள்ளனர்.

updates

இவர்களில் 23,596 பேர் வீடுகளிலும் 334 பேர்  மருத்துவமனைகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதும் இருந்து நோய் தொற்று அறிகுறியுள்ள 36,648 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதில் 36,002பேரின் பரிசோதனை முடிவுகள் ”நெகட்டிவ்” ஆக உள்ளது” என தெரிவித்தார்.