கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 211 பேர் குணமடைந்துள்ளனர்!

 

கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 211 பேர் குணமடைந்துள்ளனர்!

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, “கேரளாவில் செவ்வாய்கிழமையான இன்று ஒரு நாளில் மேலும் 13 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, “கேரளாவில் செவ்வாய்கிழமையான இன்று ஒரு நாளில் மேலும் 13 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இன்று புதிதாக கண்ணூரில் 4, கோழிக்கோட்டில் 3, காசர்கோட்டில் 1 என எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஐந்து பேர் துபாயில் இருந்து வந்தவர்கள். மற்ற மூவர் பாதிப்படைந்தவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள்.

இதையடுத்து கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர் 391பேர். இவர்களில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் 211 பேர். இதையடுத்து தற்போது மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 178 லிருந்து 173 மேலும்  குறைந்துள்ளது.  

corona

இதுவரை மாநிலம் முழுக்க 1,07,075 பேர் மருத்துவக்கண்காணிப்பில் உள்ளனர். அதில் 1,06,511 பேர் வீடுகளிலும் 564 பேர்  மருத்துவமனைகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை நோய் அறிகுறிகள் உள்ள 16,235 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை மேற்கொண்டதில்  15,488 பேரின் முடிவுகள் “நெக்கடிவ்” ஆக வந்துள்ளது” என தெரிவித்தார்.