கேரளாவில் ஏறுமுகத்தில் கொரோனா? இன்று ஒரே நாளில் 14 பேர் பாதிப்பு!!

கேரளாவில் ஏறுமுகத்தில் கொரோனா? இன்று ஒரே நாளில் 14 பேர் பாதிப்பு!!

இந்தியாவை பொருத்த வரையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் இருந்து வருகின்றது. தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தென் இந்தியாவில் முதலில் கரோனா பாதிப்புக்குள்ளான மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக கட்டுக்குள் இருந்தது. ஆனால் தற்போது பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. 

coronavirus

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, “கேரளாவில் ஞாயிற்றுக்கிழமையான இன்று மலப்புரம்  4, , பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர் தலா 2, கொல்லம், எர்ணாகுளம், காசர்கோடு, திருச்சூர் தலா ஒருவர் என 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்று பேர் வெளிநாடுகளில் இருந்துவந்தவர்கள். 7 பேர் தமிழகத்தில் இருந்தும் மூன்று பேர் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள். இதையடுத்து கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87ல் இருந்து 101 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருவரும் நோய் தொற்றிலிருந்து குணமடையவில்லை. கேரளாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர் 601 பேர். இதில் மூவர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் 497 பேராக உள்ளது” எனக்கூறினார்.