கேரளாவில் இருந்து டெல்டா மாவட்டத்திற்கு நிவாரண பொருட்கள்: மனிதம் மரித்து விடவில்லை!

 

கேரளாவில் இருந்து டெல்டா மாவட்டத்திற்கு நிவாரண பொருட்கள்: மனிதம் மரித்து விடவில்லை!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு கேரளாவில் இருந்து நிவாரணம் பொருட்கள் வந்தடைந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு கேரளாவில் இருந்து நிவாரணம் பொருட்கள் வந்தடைந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்க கடலில் உருவான ‘கஜா’ புயல் நாகப்பட்டினத்துக்கும், வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்த போது தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை உருக்குலைய செய்துள்ளது. ஏராளமானோர் வீடுகளை இழந்து தண்ணீருக்கும், உணவுக்கும் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட தற்போது வரை முழுமையாக சென்றடையவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்ப்பிணி பெண்கள், மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண்கள், முதியோர் என பெண்களும், அவர்களுக்கு உதவ முடியாத கையறு நிலையில் ஆண்களும் பெரும் சிரமத்தில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களுக்கு உதவும் விதமாக கேரளாவைச் சேர்ந்த ஒரு அமைப்பினர், டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவும் விதமாக, அடிப்படை பொருட்கள் அடங்கிய நிவாரண உதவியுடன் டெல்டா மாவட்டத்தை வந்தடைந்துள்ளனர்.

கேரளாவில் பெரும் வெள்ளம் வந்து, சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், அந்த மக்களின் இந்த உதவி பெரும் அளவிலான பாராட்டுகளை பெற்று வருகிறது.