கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த 27 லாரிகள்: தமிழக காவல்துறையிடம் வசமாக சிக்கியது எப்படி?

 

கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த 27 லாரிகள்: தமிழக காவல்துறையிடம் வசமாக சிக்கியது எப்படி?

கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றுக்கொண்டு தமிழகம் வந்த 27 லாரிகளை, தமிழக போலீசார் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.

திருநெல்வேலி: கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றுக்கொண்டு தமிழகம் வந்த 27 லாரிகளை, தமிழக போலீசார் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.

கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றுவந்து தமிழகத்தின் ஏதேனும் ஒரு பகுதியில் கொட்டிவிட்டுச் செல்வதை, சில கேரள நிறுவனங்கள் செய்து வருவதாக தமிழக காவல்துறைக்கு ரகசிய தகவல் ஒன்று கடைத்துள்ளது.

அதனடிப்படையில், திருநெல்வேலி மாவட்டம், புளியரை அருகே கேரளாவில் இருந்து வந்த லாரிகளை மறித்து போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதில், திடுக்கிடும் வகையிலான அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, கேரளாவில் குப்பைகளை கொட்டுவதற்கு அம்மாநில அரசு சில கண்டிப்பான விதிமுறைகளை பின்பற்றுவதாகவும், அதிலிருந்து தப்புவதற்காக இது போன்ற செயலில் சிலர் ஈடுபருவதும் தெரியவந்துள்ளது.

அதனையடுத்து, சோதனையின் போது பிடிபட்ட 27 லாரிகளில், பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த 23 லாரிகளுக்கு தலா ஒரு லட்சமும், மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த 4 லாரிகளுக்கு தலா 3 லட்ச ரூபாயையும் தமிழக அரசு அபராதமாக விதித்துள்ளது.