கேரளாவில் இன்று ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை!

 

கேரளாவில் இன்று ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை!

கேரளாவில் இன்று யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.

கேரள முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ கேரளாவில் ஞாயிற்றுக்கிழமையான இன்று ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படவில்லை. மாறாக காசர்கோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதையடுத்து மாநிலம் முழுவதும் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 96 லிருந்து 95 ஆக குறைந்துள்ளது.

கொரோனா பாதிப்பு

கேரளாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர் 499 பேர். இதில் மூவர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் 401 பேர். இதுவரை மாநிலம் முழுக்க 21,720 பேர் மருத்துவக்கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 21,332 பேர் வீடுகளிலும் 388 பேர்  மருத்துவமனைகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதும் இருந்து நோய் தொற்று அறிகுறியுள்ள 32,217 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதில் 31,611 பேரின் பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் ஆக உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.