கேரளாவில் இன்னொரு நபருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்.. பீதியில் மக்கள் !

 

கேரளாவில் இன்னொரு நபருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்.. பீதியில் மக்கள் !

சீனாவில் அதி வேகமாகப் பரவி வரும் கொரானா வைரஸ் இது வரை 300க்கும் மேற்பட்ட நபர்களை மரணமடையச் செய்துள்ளது.

சீனாவில் அதி வேகமாகப் பரவி வரும் கொரானா வைரஸ் இது வரை 300க்கும் மேற்பட்ட நபர்களை மரணமடையச் செய்துள்ளது. இது மனிதனுக்கு மனிதன் எளிதில் பரவுவதால், மக்களை இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து பாதுகாக்க முடியவில்லை. இந்த கொடிய வைரஸ் நோய், கொரியா, ஹாங்காங் உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் பரவி உள்ளது. அங்குக் கிட்டத்தட்ட 3000 ஆயிரம் பேருக்கு மேல் இந்த வைரஸ் தாக்குதலால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வரும் நபர்களுக்கும் வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. 

ttn

அதே போல, கடந்த 30 ஆம் தேதி சீனாவின் வூகான் நகரில் படித்து வந்த மாணவிக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண் தனிமைப் படுத்தப்பட்டு  திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிசிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சீனாவிலிருந்து வந்த மற்றொரு நபருக்கும் வைரஸ் தாக்குதல் இருப்பதாக மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால், அவரை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளித்து வருவதாகக் கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதில், முதலாவதாகச் சீனாவிலிருந்து வந்த பெண்ணுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பலனளித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.