கேரளாவில் அமைச்சர்கள், அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் 30 சதவீதம் பிடிப்பு – பினராயி விஜயன் அறிவிப்பு

 

கேரளாவில் அமைச்சர்கள், அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் 30 சதவீதம் பிடிப்பு – பினராயி விஜயன் அறிவிப்பு

கேரளாவில் அமைச்சர்கள் அரசு பிரதிநிதிகளின் மாத சம்பளத்தில் 30 சதவீதம் பிடிக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கொச்சி: கேரளாவில் அமைச்சர்கள் அரசு பிரதிநிதிகளின் மாத சம்பளத்தில் 30 சதவீதம் பிடிக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பிரதிநிதிகளின் மாத சம்பளத்திலும் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

அதன்படி அரசு ஊழியர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தின் கீழ் உள்ள பல்வேறு வாரியங்களின் உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி சுய அரசு அமைப்புகளின் உறுப்பினர்கள் ஆகியோரின் அடுத்த 5 மாத சம்பளத்தில் மாதம்தோறும் ஆறு நாட்களுக்கான சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று பினராயி விஜயன் கூறினார். மாதத்திற்கு ரூ.20,000 அல்லது அதற்கு குறைவாக சம்பாதிப்பவர்களுக்கு இத்திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

pinarayi

கொரோனா பாதிப்பால் தேசிய மற்றும் மாநில அளவில் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று முதலமைச்சர் வலியுறுத்தினார். கேரளா ஒரு நுகர்வோர் நாடாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், வரி வசூல் வருவாய் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதால், மாநிலம் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் வெடித்ததிலிருந்து வெளிநாட்டவர்களிடமிருந்து பணம் அனுப்புவதும் நிறுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் மற்றும் உணவு பாதுகாப்புக்கான செலவுகள் தவிர்க்க முடியாதவை.

இந்த சூழ்நிலையில், நாம் மாநிலத்திற்குள் கூடுதல் வளங்களை திரட்ட வேண்டும். நமது சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் உள்ளவர்கள் முதலமைச்சரின் துயர நிவாரண நிதிக்கு (சிஎம்டிஆர்எஃப்) பங்களிப்பு செய்திருப்பது நிம்மதியான விஷயம்.

அதன்படி, அடுத்த ஐந்து மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஆறு நாட்களுக்கு சம்பளம் கழிக்கப்படும். இது அரசுக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் உள்ள ஊழியர்களுக்கு பொருந்தும். இருப்பினும், மாதம் 20,000 ரூபாய்க்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்களுக்கு இத்திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்என்றார்.