கேரளாவில்அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்: 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

 

கேரளாவில்அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்: 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

கேரளாவில் உள்ள கொல்லத்திற்குக் கடந்த சனிக்கிழமை( நேற்று) மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து இன்று எர்ணாகுளம், இடுக்கி மற்றும் மலப்புரம் ஆகிய 3  மாவட்டங்களுக்கும்  மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு அரேபியக் கடலில் உருவாகி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் அடுத்த 48 மணி நேரத்தில் கேரளாவில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் தென்மேற்கு அரேபியக் கடலில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்றும் தெரிவித்துள்ளது. 

ttn

கேரளாவில் உள்ள கொல்லத்திற்குக் கடந்த சனிக்கிழமை( நேற்று) மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து இன்று எர்ணாகுளம், இடுக்கி மற்றும் மலப்புரம் ஆகிய 3  மாவட்டங்களுக்கும்  மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும் கடற்கரைக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு மின் மற்றும் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ttn

தற்போது, திருவனந்தபுரத்தில் 22 மிமீ , கோழிக்கோடு 12 மிமீ , கோட்டயம் 7 மிமீ, திருச்சூர் 7 மிமீ மற்றும் கரிபூர் 7 மிமீ அளவிற்கு மழைப் பதிவாகியுள்ளது. இதனால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.