கேரளாவிலும் குண்டுவெடிப்பு நடத்த திட்டம்; இலங்கை சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர் தகவல்?!..

 

கேரளாவிலும் குண்டுவெடிப்பு நடத்த திட்டம்; இலங்கை சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர் தகவல்?!..

ஐஎஸ்ஐஎஸ் தொடர்பால், ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவுக்கு பறந்து சென்றதாக கூறப்படும் அப்துல் ரஷித், அஷ்ஃபக் மஜித் மற்றும் அப்துல் கயூம் ஆகியோருடனும் அபூபக்கருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

இலங்கை குண்டுவெடிப்போடு தொடர்புடையவர் என கூறப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜஹ்ரான் ஹாஷிம்-ஐ பின்பற்றும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

kddf

ஈஸ்டர் அன்று இலங்கையில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 250-க்கும் அதிகமானோர் பலியாகினர். இதற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றதாக தகவல்கள் வெளியானது. இலங்கையில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய இயக்கமான தேசிய தவ்ஹீத் ஜமாத், இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் ஜஹ்ரான் ஹாஷிம் இந்த குண்டுவெடிப்பில் இறந்துவிட்டார் என இலங்கை போலீஸ் தகவல் தெரிவித்தது. இந்நிலையில், கேரளாவின் கசரகோட் பகுதியில் ஜஹ்ரான் ஹாஷிம்-ஐ பின்பற்றும் ரியாஷ் அபூபக்கர் எனும் இளைஞரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.

fbcxb

ரியாஷ் அபூபக்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்போடு தொடர்புடையவர் என்பதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஜஹ்ரான் ஹாஷிமின் பேச்சை தொடர்ந்து கேட்டு வந்திருக்கிறார். அதோபோல் தலைமறைவாகியுள்ள இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கையும் தீவிரமாக பின்பற்றியுள்ளது தெரிய வந்திருக்கிறது. 

அபூபக்கரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கேரளாவில் அவர் குண்டுவெடிப்பு நிகழ்த்த முயன்றதை ஒப்புக்கொண்டிருக்கிறார். ஐஎஸ்ஐஎஸ் தொடர்பால், ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவுக்கு பறந்து சென்றதாக கூறப்படும் அப்துல் ரஷித், அஷ்ஃபக் மஜித் மற்றும் அப்துல் கயூம் ஆகியோருடனும் அபூபக்கருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.