கேரளாவிலிருந்து தமிழகம் வந்த 400 தொழிலாளர்கள்..

 

கேரளாவிலிருந்து தமிழகம் வந்த 400 தொழிலாளர்கள்..

 கேரளாவில் வசிக்கும் பிற மாநிலத்தவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமது வழங்கப்பட்டதை அடுத்து , சுமார் 400 தொழிலாளர்கள்  தமிழ்நாடு வந்தடைந்தனர்.

representative image

கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400 ஐ நெருங்கியுள்ளது. தடுப்பு நடவடிக்கைகளாக தமிழக எல்லைகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மார்ச் 31 ஆம் தேதிவரை தமிழக எல்லைகள்  மூடப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்கள் கொண்டுவரும் வாகனங்களுக்கு மட்டும் எல்லையில் அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில் கேரளா அரசு பிற மாநிலங்களில் இருந்து வந்து பணிபுரிபவர்கள் அவரவர் சொந்த ஊருக்கு செல்லலாம் என அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து அங்கு பணிபுரியும் பிற மாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு செல்ல தீவிரம் காட்டி வருகின்றன. பேருந்து வசதி இல்லாததால், கிடைக்கும் வாகனங்களில் தமிழக எல்லையான கோவை மாவட்டம் வாளையாறு பகுதிக்கு 400 தமிழக தொழிலாளர்கள் வந்தனர்.  கடும் சோதனைக்குப் பின்னர், அவர்களது ஆதார் கார்டுகள் சரிபார்க்கப்பட்டு கோவையில் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.