கேரளாவின் ப்ரீ-ரிலீஸ் புக்கிங்கில் சாதனை படைத்த ‘சர்கார்’!

 

கேரளாவின் ப்ரீ-ரிலீஸ் புக்கிங்கில் சாதனை படைத்த ‘சர்கார்’!

கேரளாவின் அனைத்து ப்ரீ- ரிலீஸ் புக்கிங் சாதனைகளையும் தளபதி விஜய்யின் ‘சர்கார்’ திரைப்படம் முறியடித்துள்ளது.

கொச்சி: கேரளாவின் அனைத்து ப்ரீ- ரிலீஸ் புக்கிங் சாதனைகளையும் தளபதி விஜய்யின் ‘சர்கார்’ திரைப்படம் முறியடித்துள்ளது.

கேரளாவில் நடிகர் விஜய் நடித்த படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகம். இம்முறை வழக்கத்தைவிட விஜய்யின் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு அதிக எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. தமிழகத்தை போல கேரளாவிலும் விஜய்க்கு ரசிகர் பட்டாளம் ஏராளம் என்பதால், அங்கும் ‘சர்கார்’ மேனியா களைக்கட்டியுள்ளது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி ரிலீசாகும் ‘சர்கார்’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவும் கேரளாவில் படுஜோராக நடைபெற்றுள்ளது. மலையாள சினிமாவில் இதுவரை இருந்த டிக்கெட் முன்பதிவு சாதனைகளை விஜய்யின் ‘சர்கார்’ திரைப்படம் முறியடித்துள்ளது. 

சுமார் 402 திரையரங்குகளில் ரிலீசாகும் ‘சர்கார்’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் வசூல் மட்டும் ரூ.3 கோடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களில் பெரும்பாலானவை ரசிகர்களுக்கான அதிகாலை காட்சிகளாகும்.