கேரளவின் கொரோனா உதவியை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற மத்திய அரசு!

கேரளவின் கொரோனா உதவியை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற மத்திய அரசு!

கேரளாவில் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள நிதி உதவி மற்றும் சமூக, பொருளாதார பாதுகாப்பு உத்தரவுகளை பினராயி விஜயன் பிறப்பித்திருந்தார். அதை எதிர்த்து மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

kerala

கொரோனா பாதிப்பு காரணமாக வர்த்தக நிறுவனங்கள், உற்பத்தி கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மிகப்பெரிய இழப்பை பொது மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் கேரள மக்களுக்கு உதவும் வகையில் ரூ.20 ஆயிரம் கோடியில் திட்டங்களை அறிவித்தார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன். மேலும், ஏப்ரல் 6ம் தேதி வரை வங்கிகள், நிதி நிறுவனங்கள், வருமான வரித்துறை, ஜி.எஸ்.டி நிர்வாகம் உள்ளிட்ட எவரும் நிதி வசூலில் ஈடுபடக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.

high court

கேரள அரசின் இந்த திட்டத்தை இந்தியா முழுக்க மக்கள் வரவேற்று வரும் நிலையில், இதை எதிர்த்து மத்திய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக கேரள அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கும்படி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.