கேரளத்தின் வண்ணமயமான விழாவான திருச்சூர் பூரம்! நாளையுடன் நிறைவு பெறுகிறது

 

கேரளத்தின் வண்ணமயமான விழாவான திருச்சூர் பூரம்! நாளையுடன் நிறைவு பெறுகிறது

அதை தெரிந்துகொள்ள 200 ஆண்டுகள் பின்னால் போகவேண்டும்.கொச்சியை ஆண்ட ( 1790-1805 ) சக்த்தன் தம்புரான் என்று மக்களால் அழைக்கப்பட்ட ராஜா ராமவர்மா காலம் வரை ஆராட்டுபுழா என்கிற ஊரில் பூரம் நடைபெறும்.

கேரளத்தின் வண்ணமயமான விழாவான திருசூர் பூரம் இப்போது உலகப்புகழ் பெற்று விட்டது.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, மைசூர் தசரா போல திருசூர் பூரம் காண உலகெங்கும் இருந்து பயணிகள் வருவார்கள்.திருசூர் வடக்குநாதன் ( சிவன் ) கோவிலில் ஆண்டுதோறும் மலையாள நாட்காட்டியின்படி மேட மாதத்தில் ஒருவாரகாலம் நடைபெறும் திருவிழா இது.இதன் கிளைமாக்ஸ் நாளை.

தொடக்கம் எப்படி

அதை தெரிந்துகொள்ள 200 ஆண்டுகள் பின்னால் போகவேண்டும்.கொச்சியை ஆண்ட ( 1790-1805 ) சக்த்தன் தம்புரான் என்று மக்களால் அழைக்கப்பட்ட ராஜா ராமவர்மா காலம் வரை ஆராட்டுபுழா என்கிற ஊரில் பூரம் நடைபெறும். மேடமாதம் என்பது கேரளத்தில் மழை துவங்கும் காலம்.சக்த்தன் தம்புரான் காலத்தில் ஒருமுறை ஆராட்டுப்புழா பூரத்தின்போது கடும் மழைபிடித்துக்கொள்ள திருசூர் வடக்குநாதன் அந்த பூரத்தில் எழுந்தருள முடியாமல் போனதால்,திருச்சூரில் தனியாக ஒரு பூரம் நடத்த முடிவெடுத்தார்,சக்தன் தம்புரான். அதுதான் இன்று விஸ்வரூபம் எடுத்து ‘ பூரங்களுடே பூரம் ‘ என்று மலையாளிகளால் கொண்டாடப் படுகிறது.

thrissur pooram

திருவிழாவில் பயன்படும் வண்ணக் குடைகள் முதல் பங்கேற்கும் யானைகளின் நெற்றிப்பட்டம் வரை அனைத்தும் ஆண்டுதோறும் புதிதாகச் செய்யப்பட வேண்டும், என்றதுடன் விழாவில் பங்கேற்கும் கோவில்களையும் இரண்டு அணிகளாய் பிரித்தார்.ஒன்று பரமேக்காவு அணி,மற்றொன்று திருவம்பாடி அணி!.பரமேக்காவு பகவதி கோவிலுக்கும் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலுக்கும் இடையே ½ கிமீதான்.

திருவம்பாடி அணி அல்லது மேற்கு அணி!

திருவம்பாடி ஸ்ரீகிருஷணன் கோவில்

கனிமங்கலம் சாஸ்தா கோயில்

லாலூர் பகவதி கோவில்

ஐய்யந்தோள் ஸ்ரீகார்த்தியாயினி கோயில்

நெத்திலிக்காவு பகவதி கோவில்

பரமேக்காவு அணி அல்லது கிழக்கு அணி!

பரமேக்காவு பகவதி கோவில்

செம்புக்காவு பகவதி கோவில்

பனமுக்கும்பள்ளி சாஸ்தா கோயில்

சூரக்கோட்டுகாவு பகவதி கோவில்

பூக்கட்டிகர-கரமுக்கு பகவதி கோயில்

இந்த இரண்டு அணியினரும் போட்டி போட்டுக்கொண்டு திருசூர் வந்து வடக்குநாதனுக்கு சிறப்புச்செய்வதே இந்த பூரத்தின் சிறப்பு.

thrissur pooram

கொடியேற்றம்

பூரத்துக்கு ஏழுநாள் முன்பு ,இரு அணிகளைச் சேர்ந்த பத்து கோவில்காரர்களும் வடக்குநாதன் கோவிலுக்கு வருவார்கள். அவர்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெறும். அதைத் தொடர்ந்து சிறிய அளவில் வெடிகட்டு ( பட்டாசு) நடக்கும்.

வாணவேடிக்கை , முதல்ச்சுற்று.

கொடியேற்றத்தை தொடர்ந்து நான்காவது நாள் , கிழக்கு அணியும் ,மேற்கு அணியும் ஸ்வராஜ் ரவுண்ட் என்கிற மைதானத்தில் கூடுவார்கள். மாலை 7.15 மணிக்கு வாணவேடிக்கை ஒரு மணிநேரம் நடைபெறும். இதில் இரண்டு அணிகளும் பல புதுமையான வாணங்களை வீசி மக்களின் கைதட்டலுக்கு போட்டி போடுவார்கள்.

thrissur pooram

போட்டியில் யானைகளும் உண்டு

திருவம்பாடி அணியும்,பரமேக்காவு அணியும் அடுத்து அலங்கரிக்கப்பட்ட யானை களின் அணிவகுப்பை நடத்துவார்கள். பரமேக்காவு அணி அக்கரசாலாவிலும்,திருவம்பாடி அணி சர்ச் மிஷன் சொசைட்டி பள்ளி மைதானத்திலும் இந்த வர்ண ஜால அணிவகுப்பை நான்காம் நாளும்,ஐந்தாம் நாளும் நடத்துவார்கள். இதில் யானைகளின் நெற்றிப்பட்டம்,அதன் முதுகில் விரிக்கப்படிருக்கும் வண்ணக்கம்பளம்,மயிலிரகாலும்,துணியாலும் செய்யப்பட்ட சமயம்,ஆலவட்ட,வெண்சாமரம் என்று கண்ணுக்கு விருந்தாக இருக்கும் இந்த இரு நாட்களும்.

வாணவேடிக்கை

திருசூர் பூரத்தில் மொத்தம் நான்கு முறை வாண வேடிக்கை நடைபெறும்.அதில் ஏழாம் நாள் நடக்கும் ‘ சாம்பிள் வெடிக்கட்டு’ ம்,நிறைவுநாள் மாலை,மற்றும் தெயவங்கள் விடைபெற்று தத்தமது இருப்பிடத்துக்கு திரும்பும்போது , அதிகாலையில் நடக்கும் வாணவேடிக்கையும் புகழ் பெற்றவை.

பூரம் கிளைமாக்ஸ்

கனிமங்கலத்து சாஸ்த்தா அதிகாலையில் முதல் ஆளாக எழுந்தருளி பூரத்தின் உச்சகட்டத்தை துவக்கி வைப்பார்.தொடர்ந்த மேலும் ஆறு  கோவில்களில் இருந்தும் தெய்வ திருவுருக்கள் அங்கு வரும் .அடுத்தது ‘ மடத்தில் வரவு’ எனும் பஞ்சவாத்திய மேளம்.200 கலைஞர்கள் திமிள்,மத்தளம்,டிரம்ப்பட், சிம்பல், எடக்கா போன்ற வாத்தியங்களை முழக்குவாத்கள்.மதியம் இரண்டுமணிக்கு வடக்கு நாதன் கோவிலுக்குள் இளஞ்சித்தர மேளம் ஒலிக்கத்துவங்கும்.கூடவே முரசு,ட்ரம்பட்,கொம்பு,என்று ஏகப்பட்ட வாத்தியங்கள் இனைந்து வனம் அதிர இசை முழங்கும்.

thrissur pooram

இதைத்தொடர்ந்து திருவம்பாடி அணியும்,பரமேக்காவு அணியும் வடக்குநாதன் கோவிலின் மேற்கு வாயிலில் நுழைந்து தெற்கு வாயில் வழியே வெளியே வந்து எதிரெதிரே நல்ல இடைவெளி விட்டு தங்கள் மேளங்களுடனும், யானைகளுடனும் அணிவகுப்பார்கள்.

இங்கே ‘ குடமாற்றம்’ என்கிற பெயரில் யானை மேல் இருந்தபடி வண்ண வண்ண குடைகளையும்,அவற்றை அலங்கரித்த தங்களது கற்பனை திறனையும் மக்களின் முன்னால் இரண்டு அணிகளும் வெளிப்படுத்தும்

திருசூர் பூரம் திருவிழாவின் உச்சக்கட்ட வர்ணகளேபரம் இதுதான். இதைத்தொடர்ந்து மேற்கு கோபுரம் அருகிலிருக்கும் நிலப்படுத்தரவில் விழா நிறைவு பெரும்.

thrissur pooram

பகல் பூரம்

பூரம் திருவழா மிடிந்ததும் திருவம்பாடி அணியும்,பரமேக்காவு அணியும் கிளம்பி மீண்டும் ஸ்வராஜ் ரவுண்டுக்கு வருவார்கள்.அங்கே அவர்கள் ஒருவரிடம் ஒருவர் விடைபெற்று பிரிவார்கள்.இந்த நிகழ்வுக்கு ‘ உபசார சொல்லி பிரிதல்’ என்று பெயர்.அங்கும் வெடிகள் போடுவார்கள்.அதற்குப்பெயர் பகல் வெடிக்கட்டு!

இன்னொரு சிறப்பும் உண்டு!

கேரளத்தில் இஸ்லாமியரும் கிறிஸ்த்தவர்களும் பெருமளவில்,கிட்டத்தட்ட இந்துக்களுக்கு இனையான தொகையில் வாழ்கின்றனர்.அதை இந்த திருவிழா ஏற்பாடுகளிலும் பார்க்கலாம்.உதாரணமாக லட்சக்கணக்கான மக்கள் கூடும் இந்த திருவிழாவில் பந்தல் அமைப்பது பெரும்பாலும் இஸ்லாமியர்களே. அணிவகுக்கும் யானைகளை அலங்கரிக்க உதவுவது கிறிஸ்தவ மக்களும், தேவாலயங்களும் என்பது அதிகம் பேர் அறியாத செய்தி.