கேம்பஸ்ல ஆணும், பெண்ணும் பேசிக்க கூடாது!  கடுப்படிக்கும் பல்கலைக்கழகம்!

கேம்பஸ்ல ஆணும், பெண்ணும் பேசிக்க கூடாது!  கடுப்படிக்கும் பல்கலைக்கழகம்!

எதிர் பாலினரிடையே இருக்கும் கூச்சத்தையும், வினோத போக்கையும் போக்கி, அனைவரையும் சகோதர சகோதரிகளாக பாவிக்க கற்றுத் தருபவை தான் கல்விக் கூடங்கள். சிறுவயதுகளில் இருந்தே, என் நாட்டு பிரஜைகள் அனைவரையும் சகோதர சகோதரிகளாக பாவிக்கிறேன் என்று சொல்லச் சொல்லி  தான் அனைத்து நாட்டினரும் கற்றுக் கொடுக்கிறார்கள். இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள சார்சத்தா பகுதியில் பச்சாகான் எனும் பாரம்பரியமான, புகழ்பெற்ற பல்கலைக்கழகம் விநோதமான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மிகவும் பழமையான இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். 

college students

இந்நிலையில் கடந்த வாரம் பல்கலைக்கழகத்தின் சார்பில் வெளியான ஒரு அறிக்கை, அந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவ, மாணவியரிடையே மட்டுமல்லாமல், பெற்றோர்களிடத்திலும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறது. அந்த அறிக்கையில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவ மாணவிகள் ஒன்றாக சேர்ந்து செல்ல கூடாது, பல்கலைக்கழக வளாகத்திலும், வகுப்பறைகளிலும் மாணவர்களும், மாணவிகளும் பேசிக் கொள்ளவே கூடாது என்று அறிவித்துள்ளது. இதற்கான காரணமாக, ஆண்களும் பெண்களும் ஒன்றாக செல்வது  இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது எனவும் இந்த விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. மேலும் இந்த விதிமுறைகளை மீறும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களிடம், இது பற்றி புகார் தெரிவிக்கப்பட்டு, அந்த மாணவ, மாணவிகளின் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று அதிர்ச்சியளித்திருக்கிறது அந்த அறிக்கை.
அனைத்து கல்லூரிகளிலுமே இங்கொன்றும், அங்கொன்றுமாக பருவ வயதின் ஹார்மோன்களின் சுரப்பினால் சில மாணவ, மாணவிகள் வழிதவறிச் செல்லலாம். அவர்களை வாலிப வயதுகளிலேயே திருத்தும் பணியையும் செய்யும் கடமையும் கல்வி நிலையங்களுக்கு தான் உண்டு. மாணவர்களை நல்வழிப்படுத்தாமல் இன்னும் எத்தனைக் காலங்களுக்கு அதற்கு மாற்றாக அவர்களை பிரித்து வைக்கப் போகிறீர்கள்… இப்படிச் செய்வதால், பெண்களின் மீது எப்படி மாணவர்களுக்கு மரியாதை வரும்’ என்று இந்த அறிவிப்பிற்கு பல பக்கங்களில் இருந்து கண்டனங்களும் வந்துக் கொண்டிருக்கின்றன.