கேமிரா நகரமான சென்னை | காவல் ஆணையர் திரு.விஸ்வநாதனுக்கு சிறந்த ஆளுமைக்கான விருது 

கேமிரா நகரமான சென்னை | காவல் ஆணையர் திரு.விஸ்வநாதனுக்கு சிறந்த ஆளுமைக்கான விருது 

‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டாலு திருட்டை ஒழிக்க முடியாது’ எனும் பாடலுக்கேற்ப, எவ்வளவு தான் நீதி போதனைகளைச் செய்தாலும், நகர் முழுவதுமே திருட்டு கும்பல் கைவரிசை காட்டி வருகிறது. இந்நிலையில், தமிழக தலைநகர் சென்னையில் குற்றங்களை தடுக்கும் விதமாக சென்னை பெரு நகர காவல் ஆணையர் விஸ்வநாதன் ‘மூன்றாவது கண்’ எனும் திட்டத்தின் மூலமாக நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை நிறுவினார். 

அவரது இந்த திட்டத்திற்கு கைமேல் பலன் கிடைத்தது. இந்த திட்டத்தில், காவல் நிலைய கேமிராக்கள் மட்டுமில்லாது தொழில் நிறுவனங்கள்,கடைகள், வீடுகள் மற்றும் பள்ளி கல்லூரிகளிலும் கேமிராக்களை நிறுவ ஊக்கப்படுத்தினார். இதன் பலனாக சென்னையில் நடந்த திருட்டு வழக்கில் சென்னை முதல் பாண்டிசேரி வரை கிட்டதட்ட  300க்கும் மேற்பட்ட கேமிராக்களை ஆய்வு செய்து திருடனை சென்னை போலீசார் கைது செய்தனர். அதே போல சென்னையில் கடத்தப்பட்ட  சிறுமியை 8 மணிநேரத்தில் கண்டுபிடிக்க சிசிடிவி கேமிரா பெரும் உதவியாக இருந்தது. 

commissioner

மேலும் இது போல பல வழிப்பறி,செயின் பறிப்பு மற்றும் திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டு கைது செய்ய பெரும் உதவியாக நகர் முழுவதும் அமைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமிராக்கள் இருந்து வருகிறது. குற்றங்களும் இதனால் பெருமளவில் குறைந்துள்ளது. சென்னை மட்டுமல்லாது, தமிழகம் முழுவதுமே வணிகர்களும், பொதுமக்களும் சிசிடிவி கேமிராக்களை நிறுவுவதில் பெரும் அளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.  இதை கருத்தில் கொண்டு சுதந்திர தின விழா தினத்தன்று தமிழக முதல்வர் சிறந்த ஆளுமைக்கான விருதை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.ஏ.கே. விஸ்வநாதனுக்கு வழங்கினார்.