கேப்டன் ரிட்டர்ன்ஸ்; பிரசாரம் செய்ய வாய்ஸ் ரெடி-வீடியோ!

 

கேப்டன் ரிட்டர்ன்ஸ்; பிரசாரம் செய்ய வாய்ஸ் ரெடி-வீடியோ!

தேமுதிக-வின் பொதுச்செயலாளர் விஜயகாந்த், சிகிச்சை முடித்து திரும்பியிருப்பதால் அவர் பிரசாரத்தில் ஈடுபடாமல் இருந்தார்

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகத்தில் வருகிற 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்க இருக்கிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

vijayakant

நாளையுடன் பிரசாரம் நிறைவடையவுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக-வின் பொதுச்செயலாளர் விஜயகாந்த், சிகிச்சை முடித்து திரும்பியிருப்பதால் அவர் பிரசாரத்தில் ஈடுபடாமல் இருந்தார். எனினும், அவர் பிரசாரத்தில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை அவர் பிரசாரத்தில் ஈடுபடாமல் இருந்தார்.

இதனிடையே, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வடசென்னை வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களான அதிமுக தென்சென்னை தொகுதி வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன், பாமக மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் சாம்பால் ஆகியோரை ஆதரித்து இன்று மாலை பிரசாரம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தேமுதிக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜயகாந்த் வாக்கு சேகரிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. வீடியோவில் இடம்பெற்றிருக்கும் வாய்ஸை ஒலிபரப்பியபடியே, பிரசாரத்தின் போது, விஜயகாந்த் உலா வருவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் வாசிங்க

திமுக கூட்டணிக்கு வாக்களிக்க சொன்ன அனிதா அண்ணன்; கோபத்தில் கமல்ஹாசன் நீட் தேர்வுக்கு ஆதரவு?!…