கேப்டன் பொறுப்பில் விராட் கோலி புதிய சாதனை

 

கேப்டன் பொறுப்பில் விராட் கோலி புதிய சாதனை

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் செந்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றவுடன் கேப்டன் விராட் கோலி புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் செந்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றவுடன் கேப்டன் விராட் கோலி புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

உலக கோப்பை தொடருக்கு பிறகு மேற்கிந்தியத்தீவுகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை வெற்றிபெற்ற பிறகு, தற்போது டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. 

முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவா மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் திணறினர். பேட்டிங்கில் ரகானே இரண்டு இன்னிங்சிலும் அபாரமாக ஆடி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். 

Virat

இப்போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இந்த போட்டியை வென்றதன் மூலம் விராட் கோலி கேப்டன் பொறுப்பில் புதிய சாதனை படைத்துள்ளார். இவர் இந்திய துணைக் கண்டத்திற்கு வெளியே ஆடிய போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்த இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றார். அதிகபட்சமாக 12  வெற்றிகளை பெற்று தந்துள்ளார். 

இவருக்கு அடுத்த இடத்தில் 11 வெற்றிகளுடன் சவுரவ் கங்குலி இருக்கிறார். எம்எஸ் தோனி வெளிக்கண்டத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 30 போட்டிகளில் கேப்டனாக இருந்து 6 போட்டிகளில் மட்டுமே வென்றியை பெற்று தந்திருக்கிறார்.

சாதனை பட்டியல்:

1. விராத் கோஹ்லி – 12 வெற்றிகள்* (26 டெஸ்ட்)
2. சவுரவ் கங்குலி – 11 வெற்றிகள் (28 டெஸ்ட்)
3. எம் எஸ் தோனி – 06 வெற்றிகள் (30 டெஸ்ட்)
4. ராகுல் டிராவிட் – 05 வெற்றிகள் (17 டெஸ்ட்)