கேப்டன் தோனியின் பென்ட்ஹவுஸை ஆட்டையப் போட்ட அமரப்பள்ளி…!

 

கேப்டன் தோனியின் பென்ட்ஹவுஸை ஆட்டையப் போட்ட அமரப்பள்ளி…!

சீட்டிங் சம்பவங்கள் நாடு முழுக்க தொடர்ச்சியாக நடப்பது,நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது

சீட்டிங் சம்பவங்கள் நாடு முழுக்க தொடர்ச்சியாக நடப்பது,நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்பதற்கு இன்னொரு உதாரணம் இந்த சம்பவம்.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை ஒரு கம்பெனி ஏமாற்றியதாக எழுந்துள்ள புகார் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது! 
 
பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘அமரப்பள்ளி’ 2009-ல் பிரமாண்டமான வீடுகளை கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிடுகிறது. அந்த நிறுவனம் ஏற்கனவே பாப்புலரானது என்பதால்,பலரும் தங்களுக்கு வீடு கேட்டு பணத்தை கட்டியிருக்கிறார்கள்.அதில் கேப்டன் தோனியும் ஒரு ஆள்.

dhoni

 
வீடு வாங்க வந்தவரை தங்களது புது ப்ராஜெக்டுக்கு விளம்பரத் தூதுவராக ஒப்பந்தம் செய்திருக்கிறது ‘அமரப்பள்ளி’நிறுவனம்.அதற்கு தனியாக சம்பளம் பேசி ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். 2009-ஆம் ஆண்டிலிருந்து 2016-ஆம் ஆண்டு வரை தோனியும் சின்ஸியரா அந்நிறுவனத்தின் விளம்பர தூதராக இருந்திருக்கிறார்.

amarapalli

 
புராஜெக்ட் ஆரம்பித்து பல வருஷம் ஆகியும் வீட்டை முடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கவில்லை என்று பலரும் கோர்ட் படியேறியிருக்கிறார்கள். ’அமரப்பள்ளி’ நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால்தான் இவ்வளவு பெரிய குழப்பம்.

sc

 
இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு எதிராக தோனி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில்’அமரப்பள்ளி சஃபாரி’ திட்டத்தில் எனக்கான பென்ட்ஹவுஸும் ஒப்படைக்கப்படவில்லை! அதேபோல் அந்நிறுவனத்தின் விளம்பரத் தூதராகவும் இருந்தேன்.இதுவரை அதற்கான பணத்தையும் தராமல் என்னை ஏமாற்றியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள தோனி,இரண்டுக்கும் சேர்த்து தனக்கு நாற்பது கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்.
எப்பவாவது ஒரு சீட்டிங் என்றால்…ஓகே! எப்பவுமே சீட்டிங் நடந்துக்கிட்டே இருந்தால் நாடு என்னத்துக்கு ஆகும்!?