கேன் வில்லியம்சன் பந்துவீச்சில் சர்ச்சை: ஐசிசி இடம் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் புகார்!!

கேன் வில்லியம்சன் பந்துவீச்சில் சர்ச்சை: ஐசிசி இடம் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் புகார்!!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சு முறை ஐசிசி விதிமுறைக்கு முரணாக இருந்தது என இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகம் ஐசிசி இடம் புகார் அளித்துள்ளது.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் என மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. 

இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கல்லே மைதானத்தில் நடைபெற்றது. ஆகஸ்ட் 14ம் தேதி துவங்கி 18ஆம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில் உள்ளூர் அணியான இலங்கை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

இப் போட்டியின் 2வது இன்னிங்சில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீசினார். பொதுவாக முதன்மை பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் விக்கெட்டுகள் விழவில்லை என்றால் பார்ட் டைமாக வில்லியம்சன் பந்து வீசுவது வழக்கம். இதே போன்று 2வது இன்னிங்சிலும் 3 ஓவர்கள் பந்து வீசினார். 

இதில் கேன் வில்லியம்சின் பந்துவீச்சு முறை சர்ச்சைக்குரியதாக இருந்ததாகவும் ஐசிசி விதிமுறையை மீறியபடி பந்துவீசியதாகவும் புகார் எழுந்தது. இதனை ஐசிசி நிர்வாகத்திடம் இலங்கை கிரிக்கெட் அணியின் நிர்வாகம் புகார் அளித்தது. 

இதற்கு பதிலளித்துள்ள ஐசிசி, இன்னும் இரண்டு வார காலத்திற்குள் கேன் வில்லியம்சன் பந்துவீச்சு சரிபார்ப்பு பரிசோதனையில் ஈடுபட்டு அதில் தேர்ச்சியானால் அவர் தொடர்ந்து பந்துவீசலாம். இல்லையேல் இனி டெஸ்ட் போட்டிகளில் இவரது பந்து வீச்சிற்கு  தடை விதிக்கப்படும் என கூறியது. 

மேலும் இந்த 14 நாட்களுக்கு கேன் வில்லியம்சன் தொடர்ந்து பந்துவீசலாம் அதற்கு எவ்வித மறுப்பும் ஐசிசி தரப்பிடம் இருந்து கிடையாது என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்தது. 

இதைத் தொடர்ந்து இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான அகிலா தனஞ்செயா பந்துவீச்சிலும் சர்ச்சைக்கு உரியவாறு இருப்பதாக ஐசிசி இடம் புகார் எழுந்திருக்கிறது.