கேன் குடிநீர் விலை ரூ.50 ஆக உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!

 

கேன் குடிநீர் விலை ரூ.50 ஆக உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!

உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்ததால், தமிழகத்தில் இன்று வரை கிட்டத்தட்ட 300 குடிநீர் ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

உரிமம் பெறாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்ததால், தமிழகத்தில் இன்று வரை கிட்டத்தட்ட 300 குடிநீர் ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இதனை எதிர்த்தும் குடிநீருக்காக நிலத்தடி நீர் எடுக்கும் உரிமத்தை வழங்கும் முறையை எளிதாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் குடிநீர் சுத்திகரிப்பாளர்கள் கடந்த 28 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். இதற்கு ஒரு முடிவு கொண்டு வர பொதுத் துறை செயலாளருடன் குடிநீர் சுத்திகரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக இன்று காலை தகவல்கள் வெளியானது.

ttn

இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கேன் குடிநீரையே மக்கள் நம்பியிருக்கும் நிலையில், சுத்திகரிப்பளார்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கேன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ரூ.20 முதல் 30 வரையில் சென்னையின் பெரும்பாலான இடங்களில் விற்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது குடிநீர் ஆலைகளுக்குச் சீல் வைக்கப்பட்டு வருவதால், கேன் குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவி அதன் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. சென்னையின் பல்வேறு இடங்களில் ஒரு கேன் குடிநீர் ரூ.50க்கு விற்க படுகிறது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.