கேன்சர் பாதிப்பு: புதிய லுக்கில் சோனாலி பிந்த்ரே!

 

கேன்சர் பாதிப்பு: புதிய லுக்கில் சோனாலி பிந்த்ரே!

கேன்சரால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் நடிகை சோனாலி பிந்த்ரே தனது புதிய ஹேர்ஸ்டைலை வெளியிட்டுள்ளார்.

மும்பை: கேன்சரால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் நடிகை சோனாலி பிந்த்ரே தனது புதிய ஹேர்ஸ்டைலை வெளியிட்டுள்ளார்.

’காதலர் தினம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகை சோனாலி பிந்த்ரே பாலிவுட்டில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டு தயாரிப்பாளர் கோல்டி பெல்லை திருமணம் செய்துக் கொண்ட பிறகு நடிப்புக்கு முழுக்குப்போட்டார்.

இந்நிலையில், சமீபத்தில் இவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது அறியப்பட்டு நியூயார்க் நகரில் கீமோ தெராப்பி செய்து வருகிறார். மெட்டாஸ்டேட்டிக் கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பதை சமூக வலைத்தளங்களில் சோனாலி பகிர்ந்தது, அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எனினும், அனைவரது பிரார்த்தனையுடனும், மன வலிமையுடனும் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது தோற்றத்தை புகைப்படமாக வெளியிடும் சோனாலி, கொடுமையான நோயால் அவதிப்பட்டு வந்தாலும், பாசிட்டிவான விஷயங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் புதிய விக் ஒன்றை வைத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அமெரிக்காவைச் சேர்ந்த சிகை அலங்கார பெண் ஒருவர் தனக்கு இந்த விக்கை தயார் செய்து கொடுத்ததாகவும், தனது பதிவில் சோனாலி பிந்த்ரே குறிப்பிட்டுள்ளார்.