கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ள தந்தையின் ஆசையை நிறைவேற்ற வீட்டிலேயே நடந்து முடிந்த திருமணம்!

 

கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ள தந்தையின் ஆசையை நிறைவேற்ற வீட்டிலேயே நடந்து முடிந்த திருமணம்!

கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவுவதால் ஊரடங்கு மீண்டும் 2 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கொடிய நோயான கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு, மே மாதம் 3 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவுவதால் ஊரடங்கு மீண்டும் 2 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பின் தாக்கம் குறித்து ஊரடங்கில் தளர்வுகள் இருக்கும் என்றும் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியே வர வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

ttn

ஊரடங்கு அமலில் இருப்பதால் பல திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே போல சில இடங்களில் எளிமையான முறைகளில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட தேதியிலேயே நடத்தப்பட்டு வருகின்றன. இது ஒரு புறம் இருக்க வீடியோ கால் மூலம் நிச்சயதார்த்தம், செல்போனில் திருமணம் என பல நிகழ்வுகள் தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளன. இந்நிலையில், தந்தையின் ஆசையை நிறைவேற்ற ஒருவர் தன் வீட்டிலேயே திருமணம் செய்து கொண்டுள்ளார். 

ttn

மத்தியப்பிரதேசத்தின் கவுதம்புராவில் வசித்து வரும் நபரின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் தன் மகனுக்கு உடனடியாக திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அவரது ஆசையை நிறைவேற்ற, மணமகனின் அண்ணன் வீட்டிலேயே திருமணம் நடத்த முடிவு செய்து மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ளார். அதன் பின்னர் தந்தையின் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது.