கேனத்தனமா கேள்வி கேட்டால் அதற்கும் பில்..! அதிரவைக்கும் ஹோட்டல்..!?

கேனத்தனமா கேள்வி கேட்டால் அதற்கும் பில்..! அதிரவைக்கும் ஹோட்டல்..!?

யாரவது நம்மகிட்ட கேனத்தனமான கேள்வியைக் கேட்டால் நமக்கு எவ்வளவு கோபம் வரும்..? அமெரிக்காவில் ஒரு ஹோட்டலில் வேண்டியதை ஆடர் பண்ணிச் சாப்பிட்டு விட்டு பாராட்டினால் தலை வணங்கி ஏற்றுக்கொள்வதும்… கேனத்தனமான கேள்வி கேட்டால் ‘ஸ்டுபிட் கேள்வி’ என்று பில்லில் ஒரு காலத்தைச் சேர்த்து அதையும் கறாராக வசூலிக்கிறார்கள் என்றால் ஆச்சர்யப்படுறதா… அதிர்ச்சியடையிராதான்னு தெரியல! 

bill

அமெரிக்காவில் உள்ள டென்வர் நகரில் இருக்கும் ஒரு ரெஸ்டராரெண்ட்டில்தான் இந்தக் கூத்து நடக்கிறது! முதல் முறையாக அந்த ஹோட்டலுக்கு போன கஸ்டமர் ஒருவர் இந்தக் கண்டிஷன் எதுவும் தெரியாமல் கேள்வி கேட்கப் போய் இந்த அதிர்ச்சியை சந்தித்திருக்கிறார்.புகழ் பெற்ற ரெஸ்ட்ராரெண்ட் என்பதால் உள்ளே நுழைந்து தனக்கு வேண்டியதையெல்லாம் ஆடர் பண்ணி சாப்பிட்டிருக்கிறார்.கடைசியாக பில் வரும்போதுதான் ‘மாஷ்டு, பொட்டட்டோஸ், சிக்கன்,வரிசையில் ‘ஸ்டுபிட் கேள்வி’ என்று போட்டு கூடுதலாக  $0.38 அமௌண்ட் சேர்க்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போன அந்தக் கஸ்டமர், ‘இப்படி ஒரு டிஷ் நான் ஆடர் பண்ணவே இல்லையே..’ என்று கேட்டிருக்கிறார்.

bill

பக்கத்து டேபிளில் இருந்த இன்னொரு பார்ட்டி ‘சார் சத்தம் போட்டுக் கேக்காதீங்க… அதுக்கும் ஒரு பில்லை போட்டிறப்போறாங்க என்று அது குறித்து விளக்கம் சொன்ன பிறகுதான் பாதிக்கப்பட்ட கஸ்டமருக்கு விசயம் புரிந்திருக்கிறது! அந்த ஹோட்டலை விட்டு வெளியில் வந்ததும் அந்த பில்லை சமுக வலைத்தளத்தில் போட்டு ‘குமுறிக் குமுறி’ அழுதிருக்கிறார்.வழக்கம்போல் நம்ம மக்களும் அதற்குள் நுழைந்து கருத்துகளையும் கமெண்டுகளையும் அள்ளித் தெளிக்க நாடு முழுக்க பரவிவிட்டது இந்தச் செய்தி! 

bill

அதைப் பார்த்த சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகம் ‘குறிப்பிட்ட சில டேபிள்களில் அமர்ந்து சாப்பிடுகிறவர்களுக்கு மட்டும்தான் இந்தக் கண்டிஷன்.அந்த டேபிளில் சாப்பிடும்போது ஜாலியாக அரட்டை அடிக்கிறவர்கள் மட்டுமே அமர்வார்கள்.இது ஒரு ஜாலியான ஐடியா ; அதனாலதான் ரொம்ப குறைவான தொகையை ‘ஸ்டுப்பிட் கேள்வி’க்கு வசூல் பண்ணுகிறோம்.

A post shared by jonnie (@jonnieb_long) on

ஜொமெட்டோவில் ஆடர் பண்ணும்போது கூட மெனு கார்டில் இது பற்றி இருக்கும்’ என்று கூலாக விளக்கம் சொல்லியிருக்கிறார்கள்.அவர்கள் விதிக்கும் பில் தொகை நம்ம ஊர் பணத்துக்கு 27 ரூபாய்.

இது பத்திக் கேள்வி கேட்டால் நமக்கும் தேடி வந்து பில் கொடுத்தாங்கன்னா என்ன பண்றது..? ஒண்ணும் சொல்றதுக்கில்ல.!