கேட்பாறற்றுக் கிடந்த திப்பு சுல்தானின் ஆயுதங்கள்! அதிர்ச்சியில் இங்கிலாந்து தம்பதிகள்!?

 

கேட்பாறற்றுக் கிடந்த திப்பு சுல்தானின் ஆயுதங்கள்! அதிர்ச்சியில் இங்கிலாந்து தம்பதிகள்!?

ஸ்ரீரங்கப்பட்டணம் கோட்டையில் நடந்த போரில் திப்பு இறந்து போனார். திப்பு இறந்ததும் ஆங்கில சிப்பாய்கள் அவர் உடலில் இருந்த அணிகலன்கள், வைத்திருந்த ஆயுதங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டார்கள்

ஸ்ரீரங்கப்பட்டணம் கோட்டை போர்

1799-ஆம் வருடம் மே மாதம், ஆர்தர் வெல்லெஸ்லி தலைமையிலான கிழக்கிந்திய கம்பெனியின் படைக்கும், திப்புவின் படைகளுக்கும் ஸ்ரீரங்கப்பட்டணம் கோட்டையில் நடந்த போரில் திப்பு இறந்து போனார். திப்பு இறந்ததும் ஆங்கில சிப்பாய்கள் அவர் உடலில் இருந்த அணிகலன்கள், வைத்திருந்த ஆயுதங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டார்கள்.

tipu sultan

ஸ்ரீரங்கப்பட்டணம் கோட்டையும் மைசூர் நகரமும் கொள்ளையிடப்பட்டண. விலையுயர்ந்த பொருட்கள் இங்கிலாந்து அரண்மனைக்கு போய்விட்டன. சாதாரண பொருட்களை போர் வீரகள் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டார்கள்.

மேஜர் தாமஸ் ஹார்ட் என்கிற ராணுவ அதிகாரி எட்டுக் கலைப்பொருட்களை இங்கிலாந்துக்கு கொண்டு சென்றார் என்று ஆவணங்கள் சொன்னாலும் அவை எங்கே என்பது புதிராகவே இருந்துவந்தது.அந்தப் புதிருக்கு இபோதுதான் விடை கிடைத்து இருக்கிறது.

இங்கிலாந்து தம்பதி மகிழ்ச்சி

இங்கிலாந்தின் பெர்க்சையர் பகுதியில் இருக்கும் ஒரு தம்பதியர் தங்களது வீட்டை சுத்தம் செய்ய  இறங்கினார்கள்.ஒரு அலமாரியின் மேல்தட்டை சுத்தம் செய்தபோது அதில் இருந்து எட்டு உலோகப் பொருட்களை கண்டெடுத்தனர்.

tipu weapons

அவை, 220 வருடங்களுக்கு முன்னால் மைசூரில் இருந்து மேஜர் தாமஸ் ஹார்ட் கொண்டு வந்த திப்புவின் ஆயுதங்கள். இந்த உண்மையை உள்ளூர் ஏல நிறுவனமான ஆண்டெனி கிரிப் கண்டுபிடித்துக் சொன்னது. இதை கேட்ட அந்த தம்பதியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பொருளார சிக்கலில் இருந்த அவர்களுக்கு இது ஒரு லாட்டரி சீட்டுபோல என்றது ஏல நிறுவனம்.

திப்பு மற்றும் அவரது  தந்தை ஹைதர் அலி பயன்படுத்திய தங்கத்தாலும் வெள்ளியாலும் அலங்கரிக்கப்பட்ட வாட்கள், துப்பாக்கிகளோடு ஒரு வெற்றிலை பெட்டியும் இருந்திருக்கிறது. அதற்குள் 220 வருடம் முன்பு இட்டு வைத்திருந்த பாக்குகள் உட்பட அப்படியே இருந்திருக்கிறது!

கோடிகளில் ஏலம்போன பொருட்கள்

நேற்று இந்தப் புதையல் ஏலத்துக்கு வந்தது.வெள்ளித்தகடு போர்த்திய துப்பாக்கி  இந்திய மதிப்பில் 54 லட்சது 57 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. தங்க கைப்பிடி பொருத்திய திப்புவின் பிரத்தியேக வாள் 16 லட்சத்து என்பதாயிரத்துக்கும், இதோடு வெள்ளிப் பெட்டி, கிழக்கிந்திய கம்பெனியின் முத்திரையிட்ட மோதிரம் என்று பல பொருட்கள் ஏலம் விடப்பட்டதில் அந்த அதிர்ஷடக்கார தம்பதிக்கு 97 லட்சத்து 32 ஆயிரம் கிடைத்தது.

tipu weapons

செத்து இரண்டு நூற்றாண்டுகள் கழிந்த பின்னும் இரண்டு வெள்ளையர்களுக்கு பெரும் பணம் கிடைத்திருக்கிறது மைசூர் புலியால். இன்னும் இங்கிலாந்தில் இது போன்ற பழைய வீடுகளின் திறக்கப்படாத அலமாரிகளில் எத்தனை இந்தியப் புதையல் தூசு படிந்து கிடக்கின்றனவோ!?

இதையும் வாசிங்க

வந்தா ராஜாவா தான் வருவேன்…ஹெச்.ராஜா தான் டாப்; பட் அட்மின் நாட் ஹேப்பி?