கேஜிஎப் 2 படப்பிடிப்புக்குத் தடை! காரணம் இது தான்.. 

 

கேஜிஎப் 2 படப்பிடிப்புக்குத் தடை! காரணம் இது தான்.. 

கேஜிஎஃப்2 படப்பிடிப்பிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை: கேஜிஎஃப்2 படப்பிடிப்பிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் கேஜிஎப். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் வெளியான இந்த படத்தை பிரசாந்த் இயக்கியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் வரிக்கு வித்தது. அதுமட்டுமின்றி தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த சண்டைப் பயிற்சி, சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஆகிய இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கேஜிஎப் 2 படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி வந்தது. கோலார் தங்க வயலில் உள்ள சயனைடு மலையில் நூற்றுக்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் இணைந்து செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். 

தற்போது படத்தின் படப்பிடிப்பால் அந்த பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த என்.சீனிவாஸ் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த கோலார் நீதிமன்றம், உடனடியாக படப்பிடிப்பை நிறுத்துமாறு தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இவ்வழக்கு தொடர்பாக அடுத்த கட்ட விசாரணை வரும் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.