கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும் விகிதம் 11.3 தினங்களாக குறைந்தது

 

கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும் விகிதம் 11.3 தினங்களாக குறைந்தது

கோவிட்-19 பாதித்தவர்கள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும் விகிதம் கடந்த 3 நாட்களில் சராசரியாக 11.3 நாட்களாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொற்று நோயானா கொரோனா வைரஸ் நம் நாட்டில் கடந்த மார்ச் மாத மத்தியிலிருந்து மெல்ல மெல்ல பரவ தொடங்கியது. ஏப்ரல் தொடக்கத்தில் வைரஸ் பரவல் வேகமாக இருந்தது மற்றும் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்தை நெருங்கி விட்டது. தொற்று நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி விட்டது.

கொரோனா வைரஸ்

இந்த சூழ்நிலையில், கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும் விகிதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும் விகிதம் கடந்த 3 தினங்களில் மேலும் சராசரியாக 11.3 தினங்களாக குறைந்துள்ளது. மொத்த கொரோனா வைரஸ் நோயாளிகளில் 0.33 சதவீதம் பேர் மட்டுமே வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்

1.5 சதவீத நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சப்போர்ட் அளிக்கப்படுகிறது. 2.34 சதவீத நோயாளிகள் மட்டுமே அவசர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இது நாடு முழுவதும் தரமான மருத்துவ கவனிப்பு வழங்கப்படுவதே வெளிப்படுத்துகிறது. உலகளவில் கொரோனா வைரஸ் இறப்பு விகிதம் 7 சதவீதமாக இருந்தாலும், நம் நாட்டில் கோவிட்-19 இறப்பு விகிதம் சுமார் 3 சதவீதம் என்ற அளவில்தான் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அதேசமயம் இந்த கொரோனா வைரஸ் நேரத்தில் கொரோனா வைரஸ் இல்லாத இறப்புகள் மற்றும் அவசர சிகிச்சைக்காக வரும் நபர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.