கெயில் குழாய் கசிவு; பெங்களூருவில் பதட்டம்!

 

கெயில் குழாய் கசிவு; பெங்களூருவில் பதட்டம்!

கெயில் குழாயில் ஏற்பட்ட கசிவு மூலம் ஏற்பட்ட தீ விபத்து பெங்களூருவில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

பெங்களூரு: கெயில் குழாயில் ஏற்பட்ட கசிவு மூலம் ஏற்பட்ட தீ விபத்து பெங்களூருவில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய எரிவாயு கட்டுப்பாட்டு நிறுவனம் (Gail), குழாய்கள் மூலம் பல்வேறு நிறுவனங்களுக்கும் வீடுகளுக்கும் எரிவாயுவை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் நாடு முழுவதும் சுமார் 1,900 கிமீ தொலைவிற்கும் கூடுதலாக நீர்மநிலை பெட்ரோலிய வாயுவை (LPG) எடுத்துச் செல்லும் குழாய்த்தொடரை கட்டமைத்துள்ளது.

gail

இந்நிலையில், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவின் எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் உள்ள நீர்மநிலை பெட்ரோலிய வாயுவை (LPG) எடுத்துச் செல்லும் கெயில் நிறுவனத்தின் குழாயில் இருந்து கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கெயில் குழாயில் ஏற்பட்ட கசிவினால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

electronic city

விபத்து குறித்து போலீசார் கூறுகையில், அண்மைகாலமாக ஏற்படும் தீ விபத்துகளுக்கு மாநகராட்சி அதிகாரிகளே பொறுப்பு. சம்பந்தப்பட்ட கெயில் நிறுவனத்துடன் கலந்து ஆலோசிக்காமல் எரிவாயு குழாய் செல்லும் இடங்களை தோண்டுவதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகிறது. தொடர்ந்து இவ்வாறே அவர்கள் செய்வார்கள் என்றால் எதிர்காலத்தில் பெரிய விபத்துகளுக்கு அது வழிவகுக்கும் என எச்சரித்துள்ளனர்.

கடந்த மாதம் பெங்களூரு மின்சார விநியோக நிறுவன ஒப்பந்ததாரரால் பரப்பன அக்ரஹாரா அருகே உள்ள நாகனாதபுரத்தில் கெயில் குழாய் சேதப்படுத்தப்பட்டதால் நான்கு குழந்தைகள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக மாறிய தீபிகா: குவியும் பாராட்டு!