கெத்தேல் சிக்கன்… கேரளா ஸ்பெஷல்..! 

 

கெத்தேல் சிக்கன்… கேரளா ஸ்பெஷல்..! 

கேரளத்தின் ஸ்பெஷல் ஐட்டம் இது.செய்வதற்கு மிகவும் எளிமையானது.காய்ந்த மிளகாயை இடித்து தயாரிக்கப்பட்ட சில்லி ஃப்ளேக்ஸ் மட்டும் அவசியம்  தேவை.

கேரளத்தின் ஸ்பெஷல் ஐட்டம் இது.செய்வதற்கு மிகவும் எளிமையானது.காய்ந்த மிளகாயை இடித்து தயாரிக்கப்பட்ட சில்லி ஃப்ளேக்ஸ் மட்டும் அவசியம்  தேவை.

chicken

என்னென்ன தேவை.

சிக்கன் ½ கிலோ
சில்லி ஃப்ளெக்ஸ் 4 ஸ்பூன்
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
கரம் மசாலா ½ ஸ்பூன்
மஞ்சள்தூள் ½ ஸ்பூன்

ginger garlic

இஞ்சி பூண்டு பச்ட் 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் 4
தேங்காய் எண்ணெய் 2 குழிக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து.

எப்படிச் செய்வது.

மேலே கொடுத்துள்ள பொருட்களில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, எண்ணெய் தவிர அனைத்தையும் சிக்கனுடன் சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் ஃப்ரீஸரில் வைக்கவும்.

masala

அதற்குப்பிறகு, ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி அதில் இரண்டு குழிக்கரண்டி தேங்காய் எண்ணெயை ஊற்றி,ஊற வைத்திருக்கும் சிக்கனை எடுத்து சட்டியில் பரவலாக வைத்து மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக விடுங்கள்.

masala

அதற்கு பிறகு மூடியை எடுத்து விட்டு,சிக்கன் துண்டுகளை புரட்டிப்போட்டு மூடி மேலும் ஐந்து நிமிடம் வேகவிடுங்கள். அதன்பிறகு சிக்கனை எடுத்து விட்டு மீதம் உள்ள எண்ணெயில் பச்சை மிளகாய்களையும்,கறிவேப்பிலையும் போட்டு இரண்டு நிமிடம் புரட்டிவிட்டு அடுப்பை அனைத்துவிடுங்கள்.

kethel

இப்போது ஒரு ஸ்பூன் சில்லி ஃபிளேக்சையும் சட்டியில் தூவி இதை எடுத்து பொறித்த சிக்கன் மேல் தூவினாற்போல போட்டால் கெத்தேல் சிக்கன் ரெடி.