’கெட்ட வார்த்தையாலயே திட்டுறாங்க …புடிச்சி உள்ள போடுங்க சார்’… போலீஸைக் கூப்பிட்ட நடிகை…

 

’கெட்ட வார்த்தையாலயே திட்டுறாங்க …புடிச்சி உள்ள போடுங்க சார்’… போலீஸைக் கூப்பிட்ட நடிகை…

தனது ‘எவிடே’ படத்துக்கு கொஞ்சம் வித்தியாசமாக விளம்பரம் கொடுத்த ஒரே காரணத்துக்காக அவரை கண்டகண்ட கமெண்டுகளால் நாசம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

சில சமயம் முகநூலில் அதிக ஃபாலோயர்ஸ் இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு நடிகை ‘பாபநாசம்’ ஆஷா சரத் உதாரணம். தனது ‘எவிடே’ படத்துக்கு கொஞ்சம் வித்தியாசமாக விளம்பரம் கொடுத்த ஒரே காரணத்துக்காக அவரை கண்டகண்ட கமெண்டுகளால் நாசம் செய்துகொண்டிருக்கிறார்கள். அம்மணி தற்போது கேரள சைபர் க்ரைம் போலீஸின் உதவியை நாடியிருக்கிறார்.

asha

மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆஷா சரத். கமல் நடித்த ’பாபநாசம்’ திரைப்படத்தில் இவர் பெண் போலீஸ் அதிகாரியாக நடித்தார். இவர் நடித்த ‘எவிடே’ என்ற படம்வெள்ளியன்று வெளியானது. அதையொட்டி, மூன்று தினங்களுக்கு முன்பு இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் மேக்கப் இல்லாமல் கலங்கிய முகத்துடன் காட்சியளித்த ஆஷா சரத், தனது கணவனை சில நாட்களாக காணவில்லை. அவரை கண்டுபிடித்தால் கட்டப்பனை போலீசில் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோவின் அடியில், இது ‘எவிடே’ படத்திற்கான விளம்பரம் என்று   குறிப்பிடப்பட்டிருந்தது எனினும் பலரும் அதைக் கவனிக்கவில்லை. இதனால் அவர் கூறியது உண்மை என்று பலரும் கருதி பதட்டம் அடைந்தனர்.

asha

அதுகுறித்து முதலில்  மஜித் என்பவர்  இடுக்கி மாவட்ட போலீஸ் எஸ்பியிடம் ஒரு புகார் அளித்தார். அதில், ‘‘ஆஷா சரத் வெளியிட்டுள்ள வீடியோ தவறான முன் உதாரணமாகும். பார்ப்பதற்கு இது சாதாரண விஷயமாக இருந்தாலும், இது கடும் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என கூறியிருந்தார். அந்த முதல்  புகாரைத் தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் தாங்களும் ஆஷாவின் வீடியோவை உண்மை என்று நம்பி மன உளைச்சலுக்கு ஆளானதாக புகார்களை பதிவு செய்துவந்தனர்.

asha

 நடிகை ஆஷா சரத்தை அவரது முகநூல் பக்கத்தில் சுமார் 15 லட்சம் பேர் பின் தொடர்ந்து வந்த நிலையில் முகநூலில் அது தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்து வந்தன. அவரது தொலைபேசி எண்ணை சிலர் முகநூலில் ஷேர் செய்ய மக்கள் கெட்ட கெட்ட வார்த்தைகளில் ஆஷா சரத்தை அர்ச்சனை செய்ய ஆரம்பித்தனர்.இந்நிலையில் நேற்று தனது வக்கீல் மூலமாக கேரள சைபர் க்ரைமில் தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக புகார் கொடுத்துள்ளார் ஆஷா சரத். அடுத்து கேரள டிஜிபியை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருப்பதாகவும் தகவல்.