கெட்ட பய சார் இந்த காளி: வெளியான மரண மாஸ் வீடியோ பாடல்; உற்சாகத்தில் ரசிகர்கள்!

 

கெட்ட பய சார் இந்த காளி: வெளியான மரண மாஸ் வீடியோ பாடல்; உற்சாகத்தில் ரசிகர்கள்!

பேட்ட படத்தின் ஓப்பனிங் பாடலான மரண மாஸ் பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது.

சென்னை: பேட்ட படத்தின் ஓப்பனிங் பாடலான மரண மாஸ் பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் நடிகர் விஜய் சேதுபதி, சிம்ரன், சசிகுமார், த்ரிஷா, நவாசுதீன் சித்திக்  உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்ததுடன் சர்வதேச அளவில்  வசூல் சாதனை படைத்தது.

rajini

படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து படத்தின் பாடல்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே படத்தில் இடம்பெற்றுள்ள ஊலால்லா, இளமை திரும்புதே ஆகிய பாடல்கள் வெளியான நிலையில் ஓப்பனிங் பாடலான  ‘மரண மாஸ்’ பாடலை சோனி மியூசிக் நிறுவனம் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.இப்பாடல் இதுவரை 14 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள நிலையில் அனிருத் மற்றும் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.