கெட்டப்பை மாத்துனாலும் கேரக்டரை மாத்த மாத்தாமல் ஜெர்மனியில் ஒரு குஸ்தி!

 

கெட்டப்பை மாத்துனாலும் கேரக்டரை மாத்த மாத்தாமல் ஜெர்மனியில் ஒரு குஸ்தி!

உணவுத்திருவிழாவில் மாட்டிறைச்சியுடன் கேரள கோதுமைப் பரோட்டா உணவுத் திருவிழாவின் முக்கிய அரங்கில் பெரிய அளவில் விளம்பரம் வைக்கப்பட்டது. மேலும் ஊடகங்களில் அதிகம் வெளியான இந்த செய்தியினால் கேரள மாட்டிறைச்சி உணவு அரங்கத்தைத்தேடி அயல்நாட்டவர்கள் அதிகம் வந்தவண்ணம் உள்ளனர்.

ஜெர்மன் தலைநகர் பிராங்க்போர்ட்டில் நடக்கும் உலக உணவுத் திருவிழாவில் இந்திய தூதரகம் சார்பில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது, இந்த அரங்கத்தில் ஜெர்மனியில் உள்ள கேரள சமாஜம் அமைப்பினர் கேரளாவின் பிரபலமான மாட்டிறைச்சி வழங்குவதாக மெனுவில் குறிப்பிட்டிருந்தனர். இதனைக்கண்ட அங்குள்ள விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் சமூக வலைதளங்களில் ’மாட்டிறைச்சி உண்பது இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும், ஜெர்மனியில் இந்திய தூதரகம் சார்பில் உள்ள அரங்கில் மாட்டிறைச்சி உணவு வழங்குவதை தடைசெய்க’ என்று பதிவிட்டனர்.  இந்தப் போராட்டம் ஜெர்மனியின் அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பான செய்தியாக வெளியானது. இதனை அடுத்து ஜெர்மன் காவல்துறை இந்த விவகாரத்தில் தலையிட்டு நடத்திய விசாரணையில், இந்திய தூதரகத்தின் சார்பில் யாரும் காவல்துறையிடம் விளக்கம் அளிக்கவில்லை. மேலும் தூதரகத்தின் சார்பில் மாட்டிறைச்சி உணவை தடை செய்யவேண்டும் என்றும் கோரவில்லை. யாரோ சில அந்நிய நபர்கள் தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி மாட்டிறைச்சி உணவை தடை செய்ய மிரட்டியுள்ளனர் என்று கூறினர்.

German Malayalees stand united

இந்த விவகாரம் தொடர்பாக அடை யாளம் தெரியாத நபர்கள் மீது ஜெர்மன் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து உணவுத்திருவிழாவில் மாட்டிறைச்சியுடன் கேரள கோதுமைப் பரோட்டா  உணவுத் திருவிழாவின் முக்கிய அரங்கில் பெரிய அளவில் விளம்பரம் வைக்கப்பட்டது. மேலும்  ஊடகங்களில் அதிகம் வெளியான இந்த செய்தியினால் கேரள மாட்டிறைச்சி உணவு அரங்கத்தைத்தேடி  அயல்நாட்டவர்கள் அதிகம் வந்தவண்ணம் உள்ளனர். இதனை அடுத்து கேரள சமாஜம் அமைப் பினர். கூடுதலாக அரங்கம் அமைத்து மாட்டிறைச்சி உணவை பரிமாறினர்.