“கெட்டதுல ஒரு நல்லது நடந்துருக்கு” : கொரோனா குறித்து நடிகை ரோஜா வெளியிட்ட வீடியோ!

 

“கெட்டதுல ஒரு நல்லது நடந்துருக்கு” : கொரோனா குறித்து நடிகை ரோஜா வெளியிட்ட வீடியோ!

ஜெகன்மோகன் ரெட்டியின் தலைமையிலான அரசில்  ரோஜாவுக்கு ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

90களில்  முன்னணி நடிகையாக வலம்  வந்தவர் நடிகை ரோஜா. தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ள ரோஜா சினிமா மட்டுமல்லாது  அரசியலில் சாதித்துள்ளவர்.

முதலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாக தன்னை நிலைநிறுத்தி கொண்ட ரோஜா பிறகு நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவானார்.  ஜெகன்மோகன் ரெட்டியின் தலைமையிலான அரசில்  ரோஜாவுக்கு ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை ரோஜா கொரோனா குறித்து வீடியோ ஒன்றை வெளியீட்டுள்ளார். அதில், ‘கொரோனா வைரசால் பாதிக்கபட்ட பெப்சி  தொழிலாளர்களுக்கு 100 கிலோ அரிசி வழங்க போறேன். இது பெரிய விஷயம் இல்லை. ஆனால் நீங்கள் செய்ய வேண்டியது குடும்பத்தோட வீட்டுக்குள்ள இருங்க, தள்ளி இருங்க. ஏன்னா நம்ம 40 வருஷம் கஷ்டப்பட்டிருப்போம். கெட்டதுல ஒரு நல்லது; இந்த விடுமுறையை குடும்பத்துடன் செலவு பண்ணுங்க. நீங்க வீட்டில் இருப்பது சமூகத்துக்கு செய்யுற பெரிய உதவி’ என்று கூறியுள்ளார்.