கெஞ்சிக் கேட்கும் தல ரசிகர்கள்: கண்டுக்காமல் இருக்கும் ‘விஸ்வாசம்’ டீம்!

 

கெஞ்சிக் கேட்கும் தல ரசிகர்கள்: கண்டுக்காமல் இருக்கும் ‘விஸ்வாசம்’ டீம்!

தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சென்னை: தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தல அஜித்துடன் இயக்குநர் சிறுத்தை சிவா 4வது முறையாக கூட்டணி வைத்துள்ள திரைப்படம் ‘விஸ்வாசம்’. பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மதுரை பின்னணியில் இப்படத்தின் கதை உருவாகியுள்ள இப்படத்தில் தல அஜித் இதுவரை நடிக்காத வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளாராம்.

டி.இமான் இசையில் இப்படத்தின் மெரும்பாலான பாடல்கள் பட்டையை கிளப்பியது. அஜித் ரசிகர்களுக்காக தயாரிப்பு நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடல் ரிலிக் வீடியோ இன்று மாலை 7 மணிக்கு ரிலீசாகவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் என்று பார்த்தால், கெஞ்சி கேட்கிறோம், தல அஜித்தை பார்க்க வேண்டும், டீசர் குறித்த அறிவிப்பை வெளியிடுங்கள் என அஜித் ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.