கெஜ்வாலின் டென்மார்க் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு

 

கெஜ்வாலின் டென்மார்க் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டென்மார்க் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்தார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் சி-40 உச்சிமாநாடு 2019 நேற்று தொடங்கியது. இம்மாதம் 12ம் தேதி வரை இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விழா அமைப்பினர் அழைப்பு விடுத்து இருந்தனர். இதனையடுத்து அரவிந்த கெஜ்ரிவாலும் ஒரு நடை டென்மார்க்கு போய் பேசிவிட்டு வந்து விடுவோம் என முடிவு செய்தார்.

சி-40 உச்சிமாநாடு

இதனையடுத்து சி-40 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக டென்மார்க் செல்ல அனுமதி தாங்க என்று மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் வெளியுறவு துறை அமைச்சகம் அரவிந்த் கெஜ்ரிவால் டென்மார்க் செல்ல அனுமதி வழங்க மறுத்து விட்டது. அதேசமயம், அந்த உச்சிமாநாட்டில் பங்கேற்க மேற்குவங்க அமைச்சர் பிர்ஹாத் ஹக்கீமுக்கு அனுமதி கொடுத்தது.

பிரகாஷ் ஜவடேகர்

இதனையடுத்து ஒரு கண்ணுல வெண்ணெய், ஒரு கண்ணுல சுண்ணாம்பா என சர்ச்சை கிளம்பியது. இதற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், டென்மார்க்கில் நடைபெறும் உச்சிமாநாடு மேயர்கள் அளவிலான கருத்தரங்கு. அதனால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் முதல் அமைச்சர்கள் போன்ற அரசியல் செயற்பாட்டாளர்கள் அழைக்கப்படும்போது இங்கே தனி நெறிமுறை உள்ளது  என தெரிவித்தார்.