கூலி வேலை பார்ப்பவருக்கு ரூ. 1கோடி வரி பாக்கி செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ்!

கூலி வேலை பார்ப்பவருக்கு ரூ. 1கோடி வரி பாக்கி செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தினக்கூலி வேலை பார்த்துவரும் ஒருவரும் 1 கோடி ரூபாய் வரி பாக்கியை செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் தினக்கூலி வேலை பார்த்துவரும் ஒருவரும் 1 கோடி ரூபாய் வரி பாக்கியை செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தானே மாவட்டத்தில் கல்யாண் நகரில் வசிக்கும் பாவ்சாகிப் ஆஹிர். இவர் கூலி வேலை பார்த்துவருகிறார். இவருடைய வங்கிக்கணக்கில் கடந்த சிலநாட்களுக்கு முன் திடீரென  58 லட்ச ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது. இதனையடுத்து ஆஹிர் தனது வங்கிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக வங்கியில் புகார் அளித்தார். அப்போது மோசடியாக தமது பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டிருப்பது ஆஹிருக்கு தெரியவந்துள்ளது.

வருமான வரித்துறை நோட்டீஸ்

இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி வங்கிக் கணக்கில் 56 லட்ச ரூபாய் மற்றும் 21 லட்ச ரூபாய் தனித்தனியே டெபாசிட் செய்ததற்காக ஒரு கோடியே 5 லட்ச ரூபாய் வரி செலுத்துமாறு வருமான வரித்துறை ஆஹிருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவல் அளித்தார்.