கூலித் தொழிலாளி அக்கவுண்டில் ரூ.1.47 கோடி பண பரிவர்த்தனை… நோட்டீஸ் அனுப்பிய ஐ.டி துறை

கூலித் தொழிலாளி அக்கவுண்டில் ரூ.1.47 கோடி பண பரிவர்த்தனை… நோட்டீஸ் அனுப்பிய ஐ.டி துறை

ஒடிஷா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சனாதரா காந்த். கூலித் தொழிலாளியான இவர் மானியங்கள் பெறுவதற்காக வங்கிக் கணக்கைத் தொடங்கினார். ஆனால், அதில் எந்த பரிவர்த்தனையையும் செய்தது இல்லையாம்.

ஒடிஷா மாநிலத்தில் கூலித் தொழிலாளியின் வங்கிக் கணக்கில் ரூ.1.47 கோடி அளவுக்கு பண பரிவர்த்தனை நடந்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி கூலித் தொழிலாளிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஷா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சனாதரா காந்த். கூலித் தொழிலாளியான இவர் மானியங்கள் பெறுவதற்காக வங்கிக் கணக்கைத் தொடங்கினார். ஆனால், அதில் எந்த பரிவர்த்தனையையும் செய்தது இல்லையாம்.

bank transaction

இந்த நிலையில், அவருக்கு வருமான வரித்துறையிலிருந்து நோட்டீஸ் வந்துள்ளது. அதுபற்றி அவருக்குத் தெரியவில்லை. இந்த நோட்டீசை தெரிந்தவர்களிடம் காட்டி விசாரித்தபோது அவர்கள், “உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.1.47 கோடி பரிவர்த்தனை நடந்துள்ளது. இது தொடர்பான விளக்கம் அளிக்கும்படியும் வருமானத்துக்கு ரூ.2.59 லட்சம் வரி செலுத்த வேண்டும் என்றும் வருமான வரித்துறை நோட்டீஸ்” அனுப்பியுள்ளது என்று கூறியுள்ளனர். 
இதனால் அதிர்ச்சியடைந்த சனாதரா காந்த், “நான் ஒரு கூலித் தொழிலாளி, நான் எப்படி கோடிக் கணக்கில் பண பரிவர்த்தனை மேற்கொண்டிருக்க முடியும். 2.59 லட்சம் ரூபாய் எல்லாம் என்னால் எப்படி கொடுக்க முடியும்” என்று கேட்டு கலங்கினார்.
மேலும், என்னுடைய முதலாளி என்னுடைய நிலப் பத்திரத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினார். மேலும், சில வெள்ளைத் தாள்களிலும் கையெழுத்து வாங்கினார். முதலாளி சொன்னார் என்பதற்காக கையெழுத்துப் போட்டேன். அதில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று நினைக்கிறேன் என்று வெள்ளந்தியாக கூறியுள்ளார். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.