கூலிக்கேட்டு கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பல் ! கணவனை காப்பாற்ற சென்ற மனைவி பலி !

 

கூலிக்கேட்டு கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பல் ! கணவனை காப்பாற்ற சென்ற மனைவி பலி !

செம்மரம் வெட்டியதற்கு கூலி கேட்டு, தகராறில் ஈடுபட்ட கும்பல் தாக்கியதில் ஒரு பெண் பரிதாபமாக கொல்லப்பட்டார்.
வாணியம்பாடி அருகே பூங்குளம் கிராமத்தில் சீனிவாசன், சாந்திபிரியா தம்பதியினருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கோமதி என்ற குழந்தை உள்ளது. விவசாயத்தில் போதிய வருமானம் இல்லை என்பதால் ஒடுக்கத்தூர் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவருடன் சேர்ந்த செம்மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் சீனிவாசன்.

செம்மரம் வெட்டியதற்கு கூலி கேட்டு, தகராறில் ஈடுபட்ட கும்பல் தாக்கியதில் ஒரு பெண் பரிதாபமாக கொல்லப்பட்டார்.
வாணியம்பாடி அருகே பூங்குளம் கிராமத்தில் சீனிவாசன், சாந்திபிரியா தம்பதியினருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கோமதி என்ற குழந்தை உள்ளது. விவசாயத்தில் போதிய வருமானம் இல்லை என்பதால் ஒடுக்கத்தூர் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவருடன் சேர்ந்த செம்மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் சீனிவாசன். சீனிவாசனும் பூங்குளம் கிராமத்திலிருந்து மரம் வெட்டுவதற்கு கூலி ஆட்களை அனுப்பி வைப்பது வழக்கம்.

criminals

கடந்த வாரம் பூங்குளம் கிராமத்தில் இருந்து கிருஷ்ணமூர்த்தி, பழனி, இளையராஜா, சென்றாயன், சஞ்சய், பழனி, வெங்கடேசன் ஆகியோர் அசோகனுடன் ஆந்திரா வனப்பகுதிக்கு சென்று செம்மரங்களை வெட்டி தமிழகத்திற்கு கடத்தி வந்து விற்பனை செய்துள்ளனர். ஆனால் மரங்கள் வெட்டியவர்களுக்கு உடனடியாக கூலி தராமல் பின்னர் தருவதாக சொல்லி அசோகன் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் ஒரு வாரம் ஆகியும் கூலி வழங்காததால் செம்மரம் வெட்டிய அந்த ஏழு பேரும், அசோகனிடமிருந்து கூலி வாங்கித்தருமாறு சீனிவாசனிடம் சென்று நெருக்கடியை கொடுத்துள்ளனர். இதையடுத்து நேற்று இரவு பணம் கேட்டு ஆரம்பித்த வாக்குவாதம் பின்னர் கைகலப்பு வரை சென்றது. அப்போது அந்த 7 பேரும் சேர்ந்து சீனிவாசனை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

police

சீனிவாசனை அவரது மனைவி சாந்திப்பிரியா, தாய், தந்தை ஆகியோர் காப்பாற்ற முயற்சி செய்தனர். அப்போது தகராறில் ஈடுபட்ட கம்பல் சாந்திபிரியாவை கீழே தள்ளியது. இதில் மயக்கமடைந்த சாந்திபிரியா சற்று நேரத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து குறித்து சீனிவாசனின் தந்தை மற்றும் மாமனார் ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து செம்மரம் வெட்டும் தொழிலாளிகளான கிருஷ்ணமூர்த்தி, பழனி, இளையராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நான்கு பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.