கூட்டத்தில் நாற்காலிகள் எல்லாம் காலி: எப்படியிருந்த திமுக,இப்படியாகிவிட்டது? ஸ்டாலினை கலாய்த்த அதிமுக அமைச்சர்

 

கூட்டத்தில் நாற்காலிகள் எல்லாம் காலி: எப்படியிருந்த திமுக,இப்படியாகிவிட்டது? ஸ்டாலினை கலாய்த்த அதிமுக அமைச்சர்

தேர்தல் பிரசாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். 

மதுரை: தேர்தல் பிரசாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். 

பிரசாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் 

dmk admk

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக – அதிமுக போன்ற பிரதான கட்சிகள் 
வாக்கு  சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். திமுக மற்றும் அதிமுகவில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முக ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில், திமுக கூட்டணி சார்பாக  மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எழுத்தாளர் சு.வெங்கடேசனை  ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு  சேகரிப்பில்  ஈடுபட்டார். அப்போது, அதிமுக கூட்டணியைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

எப்படியிருந்த திமுக, இன்று இப்படியாகிவிட்டது?

sellur

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு, ‘மதுரையில் ஸ்டாலின் கலந்து கொண்ட கூட்டத்தில் கூட்டமே இல்லை. நாற்காலிகள் காலியாக இருந்தது. அதற்கு அவருடைய பேச்சு தான் காரணம். கலைஞர் பேச வருகிறார் என்றால் அதை கேட்கவே தனி கூட்டம் வரும். ஆனால்  ஸ்டாலின் பேச்சோ காமெடியாக உள்ளது.அதனால் அதை யாரும் காது கொடுத்துக் கூட கேட்பதில்லை. முன்னாள் பிரதமர் சோனியாஜி என்று உளறிக் கொட்டுகிறார். எப்படியிருந்த திமுக, இன்று இப்படியாகிவிட்டது?’ என்றார். 

வருத்தத்தில் திமுகவினர் 

durai

தொடர்ந்து பேசிய அவர், ‘முன்பெல்லாம்  திமுகவின் பேச்சாளர்கள் யார் வந்தாலும், அவர்களுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஆனால்  இன்றோ அவர்களும், மூத்த நிர்வாகிகளும், ஒன்றுமே தெரியாத ஒரு தலைவரை பற்றிப் பேசுகிறோம் என்று எண்ணி வருத்தத்தில் உள்ளனர்’ என்று தெரிவித்தார். 
இதைக் கேட்டு அவருடன் இருந்த அதிமுக நிர்வாகிகள் சிரிப்பலைகளை வீசினர். 

இதையும் வாசிக்க: அசிங்கங்களையும் அவலங்களையும் போற்றுவது தான் தரமா? சூப்பர் டீலக்ஸ் படத்தை கடுமையாக சாடிய பிரபல நடிகர்!